நண்பர்களே, நம் ஊரில் தெருக்களில் சேதம் ஏற்பட்டு பள்ளங்கள் உண்டாகி, அதன் காரணமாக விபத்துக்கள் நிகழ்ந்து உயிர் இழப்புகளும் ஏற்படுவதுண்டு. இந்த விபரீதத்தை உணர்ந்து மத்திய அரசு மேரி சடக் (என்னுடைய சாலை) என்னும் பெயரில் ஒரு ஆப் வெளி கொண்டு வந்துள்ளது. இதை பதிவிறக்கம் செய்து அதில் சேதம் ஆகிய உங்கள் பகுதி சாலையின் வீடியோ அல்லது புகைப்பட பதிவு போட்டு சாலையின் தெளிவான முகவரி, தபால் குறியீட்டு எண் ஆகியவற்றை தெரிவித்தால் மத்திய அரசே அந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கும் என்னும் விஷயத்தை உங்களுடைய அனைத்து சொந்தங்களுக்கு, நட்புக்களுக்கும் தெரியப்படுத்தவும்.

ByKarmegham

Dec 26, 2024
திண்டுக்கல் அருகே கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த 4 இளைஞர்கள் கைது…
திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த கணேஷ்(30) என்பவர் மொட்டணம்பட்டி, ஜம்ஜம் நகரில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நண்பர்களான இந்திரகுமார் மற்றும் செல்வம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த விக்ரமன்(27), ராகுல்(21), சரவணன்(19), விக்டர்ஆண்டனி(19) ஆகிய 4 பேர் கணேசின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.2500 பணத்தைப் பறித்து சென்றது தொடர்பாக தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்…
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்திற்குள் அவர் எப்படி நுழைந்தார்? பல்கலைக்கழகத்தில் உள்ள நுழைவு வாயில்கள் எத்தனை? பாதுகாப்பு குறைபாடுகள் என்ன? என்பதை விரிவாக தெரிந்துகொள்வோம்.
37 வயதான ஞானசேகரன் அதே கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே இந்த பகுதியில் இருப்பதால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்ளே எப்படி செல்வது எப்படி வெளியே வருவது என்ற அனைத்து விவரங்களும் தெரிந்து வைத்துள்ளார். பல்கலைக்கழகத்தின் பின்பகுதியை உள்ள சூர்யா நகர் வழியாக பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடி இவர் சென்று வந்துள்ளார்.
கோட்டூர்புரத்திற்கு எதிரே உள்ள சாலையில் கூவம் நதி கரையை ஒட்டி அமைந்துள்ளது சூர்யா நகர் பகுதி. அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்பகுதியில் கடைசி பகுதி என்பதால் ஆள் நடமாட்டம் இல்லாமல் போதிய வெளிச்சமும் இல்லாமல் இந்தப் பகுதி உள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஞானசேகரன், இரவு நேரத்தில் இந்த பகுதி வழியாக சுவரில் ஏறி குதித்து பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளே சென்றுள்ளார் என்கிறது காவல்துறை.
அடிக்கடி இதே வேலையாக இந்த பகுதியில் சுற்றி வந்த ஞானசேகரன், தனியாக இருக்கும் மாணவிகள் மற்றும் ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் மாணவிகள் என்று பலரிடம் தான் போலீஸ் என்று பேச்சுக் கொடுத்துள்ளார். அதே போன்று ஆண் நண்பர்களுடன் பேசிவரும் பெண்களையும் குறிவைத்து இது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவருடன் கூட்டாளியாக சென்றது யார்? யார்? என்பது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *