வாசிப்பை நேசிப்போருக்கான அறிவுத்திருவிழா, சென்னைப் புத்தகக் காட்சி!
48-ஆவது சென்னைப் புத்தகக்காட்சி 2025-ஐ நந்தனம் YMCA மைதானத்தில் இன்று தொடங்கி வைத்தோம்.
அரங்கு எண் : 390-ல் DMK Youth Wing-ன் ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’ சார்பிலான புத்தகங்கள்,
அரங்கு எண் : 392-ல் அமைந்துள்ள தி.மு.கழகத்தின் ‘கலைஞர் கருவூலம்’ சார்பிலான வெளியீடுகளை பார்வையிட்டோம்.
மேலும், வெவ்வேறு பதிப்பகங்களின் அரங்குகளுக்கும் சென்று அங்குள்ள புத்தகங்களின் விவரங்களைக் கேட்டறிந்தோம்.
இப்புத்தகக்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துக்கு (#BAPASI) பாராட்டுகள்.
நந்தனத்தில் இந்த அறிவு வனம் இன்று தொடங்கி ஜனவரி 12 வரை திறந்திருக்கும். அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அன்பும், வாழ்த்தும்!
Ma Subramanian Anbil Mahesh Poyyamozhi
CVMP. Ezhilarasan, MLA I Paranthamen Thamizhachi Thangapandian Prabhakar Raja PriyaRajan DMK Saidai Mu.Mageshkumar
BAPASI #chennaibookfair2025
குகேஷின் உறுதியும் அர்ப்பணிப்பும் என்னை கவர்ந்தது: நேரில் அழைத்து மோடி பாராட்டு.
குகேஷின் உறுதியும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது என உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற குகேஷை பிரதமர் மோடி இன்று நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார்.
சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இன்று ( டிச.,28) குகேஷை பிரதமர் மோடி அவரது அலுவலக இல்லத்திற்கு நேரில் அழைத்தார். அவரிடம் கலந்துரையாடியதுடன் குகேஷை பாராட்டி வாழ்த்தி செஸ் போர்டு ஒன்றையும் பரிசாக அளித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ‛எக்ஸ்’ தளத்தில் பதிவேற்றியது , குகேஷை நேரில் அழைத்து சிறந்த கலந்துரையாடல் நடத்தினேன் .
அவரது உறுதியும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொருவரின் வெற்றியிலும் அவரது பெற்றோர்கள் உள்ளனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
• https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *