மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் இன்று (23.02.2025) திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வட்டமலைக்கரை ஓடை நீர்தேக்கத்திலிருந்து பாசனப் நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீரை திறந்து வைத்தார். உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ் அவர்கள், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஃபெலிக்ஸ் ராஜா, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் திரு.இல.பத்மநாபன், செயற்பொறியாளர் (நீர்வளத்துறை, வட்டமலைக்கரை ஓடை நீர்தேக்கம்) திரு.ரா.சுப்பிரமணியன் வெள்ளகோவில் நகர மன்ற தலைவர் திருமதி .கனியரிசி முத்துக்குமார் ஆகியோர் உள்ளனர்.

பரம்பரை சொத்தை உங்களின் பெயருக்கு மாற்றுவது எப்படி
உயில் எழுதாமல் இருந்தால் என்ன செய்வது
சொத்துரிமை தொடர்பான சட்ட நடைமுறைகள் பலருக்கும் புரியாத புதிராகத்தான் இருந்து வருகிறது.
குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட அல்லது பரம்பரை சொத்தை தங்களின் பெயருக்கு மாற்றும் நடைமுறை குறித்து பலருக்கும் தெரிவதில்லை.
இந்த செயல்பாட்டில் தங்களின் உரிமைகள் என்ன?, சட்ட நடைமுறைகள் என்னென்ன? என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.
எனவே வாரிசுகள் தங்கள் உரிமையை பாதுகாப்பதற்கும், சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் தேவையான விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
பரம்பரை உரிமையை நிரூபிக்க தேவைப்படும் ஆவணங்கள்: பரம்பரை சொத்துக்கு உரிமை கோரும்போது, அதற்கு தேவையான சரியான ஆதாரத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
உயில் அடிப்படையில் சொத்துக்கள் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டிருந்தாலோ அல்லது வாரிசுகளின் பெயர்கள் தெள்ளத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலோ சொத்தை மாற்றுவது எளிதான செயல்முறையே.
ஆனால் உயிலின் விதிகள் சட்டத்திற்கு முரணாக இருந்து அல்லது மற்ற வாரிசுகளுக்கு அவை ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தால் சட்ட நடவடிக்கைகள் தேவைப்படலாம்.
உயில் இல்லாமல் சொத்தைப் பிரிப்பது எப்படி?: ஒருவர் உயில் எழுதாமல் இறந்து போனால் அவரது சொத்துக்களை பிரிப்பது சற்று சிக்கலான விஷயமாக இருக்கலாம்.
ஏனென்றால் உயில் இல்லாத நிலையில் சொத்து யாருக்கு சொந்தம் என்பது சட்டப்படிதான் தீர்மானிக்கப்பட வேண்டும்.
ஒருவேளை வாரிசுகளிடையே ஒற்றுமை இருந்து தங்கள் சொத்துக்களை பிரித்துக் கொள்ளும் மனப்பான்மை இருந்தால் இந்த செயல்முறையும் எளிதாக முடியும்.
அனைத்து வாரிசுகளும் சொத்தை எப்படி பிரிப்பது என ஒருமனதாக முடிவு செய்தால் அதை சட்டபூர்வமாக அவர்களே பதிவு செய்யலாம்.
சொத்தைப் பிரிக்கும்போது, அனைத்து வாரிசுகளும் “தடையில்லா சான்றிதழ் (No Objection Certificate – NOC)” சமர்ப்பிக்க வேண்டும்.
அதாவது, இந்த சொத்தைப் பிரிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், ஒரு பிரமாணப் பத்திரத்தையும் (Affidavit) பதிவு செய்ய வேண்டும்.
இந்த பிரமாணப் பத்திரத்தில், சொத்து பற்றிய விவரங்கள், வாரிசுகளின் பெயர்கள், அவர்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
பிற முக்கிய விஷயங்கள்: சொத்து பரிமாற்றத்திற்கு பிறகு மற்ற செயல்முறைகளையும் செய்வது கட்டாயமாகும்.
அதன்படி புதிய உரிமையாளரின் பெயர் வருவாய்த்துறை பதிவுகளில் பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்த செயல்முறைக்கான செலவு மாநிலங்களை பொறுத்து மாறுபடலாம்.
மேலும் சொத்தில் ஏற்கனவே வீட்டு கடன் இருந்தால் அல்லது குத்தகைக்கு விடப்பட்டிருந்தால் அதற்கேற்ப நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.
பரம்பரை சொத்துரிமை தொடர்பான சிக்கல்களைத் தடுக்க சரியான ஆவணங்கள் மற்றும் சட்ட நடைமுறைகளை உடனடியாக முடித்து வைப்பது அவசியம்.
மேலே கூறப்பட்டுள்ள விவரங்களை சரியாக பின்பற்றுவதன் மூலம் மூதாதையர் சொத்து பரிமாற்றத்தை சமூகமாக செய்ய முடியும்.
மத்திய
அமைச்சரவை
புதிய
கல்விக் கொள்கையை அங்கீகரித்தது.
மத்திய அமைச்சரவை
இந்திய அரசின்
கல்வி அமைச்சகம் முன்மொழிந்த புதிய கல்விக் கொள்கை
2020-ஐ அங்கீகரித்தது.
34 ஆண்டுகளுக்குப் பிறகு,
புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின்
முக்கிய அம்சங்கள்
கல்வி கட்டமைப்பு
(5+3+3+4 சூத்திரம்)
1) 5 ஆண்டுகள் –
அடிப்படைக் கல்வி
நர்சரி (4 வயது)
ஜூனியர் KG (5 வயது)
சீனியர் KG (6 வயது)
வகுப்பு 1 (7 வயது)
வகுப்பு 2 (8 வயது)
2) 3 ஆண்டுகள் –
தயாரிப்புக் கல்வி
வகுப்பு 3 (9 வயது)
வகுப்பு 4 (10 வயது)
வகுப்பு 5 (11 வயது)
3) 3 ஆண்டுகள் –
மேல்நிலை கல்வி
வகுப்பு 6 (12 வயது)
வகுப்பு 7 (13 வயது)
வகுப்பு 8 (14 வயது)
4) 4 ஆண்டுகள் –
உயர்நிலை கல்வி
வகுப்பு 9 (15 வயது)
வகுப்பு 10 (SSC) (16 வயது)
வகுப்பு 11 (FYJC) (17 வயது)
வகுப்பு 12 (SYJC) (18 வயது)
சிறப்பு அம்சங்கள்:-
12வது வகுப்பில் மட்டும்
வாரியத் தேர்வு
10வது வகுப்பு வாரியத் தேர்வு இனி கட்டாயமில்லை.
MPhil நிறுவனங்கள் மூடப்படும். MPhil படிப்பு நிறுத்தப்படும்.
4 ஆண்டு பட்டப்படிப்பு
கல்லூரி பட்டப்படிப்பு
இனி
4 ஆண்டுகளாக இருக்கும்.
1 வருடம் படித்தால் சான்றிதழ்
2 வருடங்கள் படித்தால் டிப்ளமோ
3 வருடங்கள் படித்தால் பட்டம்
4 ஆண்டு பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக
1 வருடத்தில் MA படிக்கலாம்.
மொழிக் கல்வி
5வது வகுப்பு வரை
தாய்மொழி,
உள்ளூர் மொழி
மற்றும்
தேசிய மொழியில் கற்பித்தல். ஆங்கிலம்
ஒரு பாடமாக
மட்டும் கற்பிக்கப்படும்.
செமஸ்டர் முறை
9வது முதல் 12வது வகுப்பு வரை செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்படும்.
படிப்புகளுக்கிடையே மாற்றம்.
ஒரு படிப்பின் நடுவில்
மற்றொரு படிப்பைத்
தொடர விரும்பும் மாணவர்களுக்கு
இடைவெளி எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
உயர்கல்வியில் சேர்க்கை விகிதம்.
2035க்குள் உயர்கல்வியில் சேர்க்கை விகிதத்தை (GER) 50% ஆக உயர்த்துவது இலக்கு.
உயர்கல்வி சீர்திருத்தங்கள்
கல்வி, நிர்வாக மற்றும்
நிதி தன்னாட்சி உள்ளிட்ட
பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும்.
மொழி மற்றும்
தொழில்நுட்ப மேம்பாடு.
பிராந்திய மொழிகளில் மின்னூட்கள் (E-courses) அறிமுகப்படுத்தப்படும்.
மெய்நிகர் ஆய்வகங்கள் (Virtual Labs) உருவாக்கப்படும்.
தேசிய கல்வித் தொழில்நுட்ப மன்றம் (NETF) நிறுவப்படும்.
ஒருங்கிணைந்த விதிமுறைகள்.
அரசு, தனியார் மற்றும் டீம் பல்கலைக்கழகங்களுக்கு ஒரே மாதிரியான விதிமுறைகள் பயன்படுத்தப்படும்.
இந்த புதிய கல்விக் கொள்கை, இந்திய கல்வி முறையை முழுமையாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களின்
கற்றல் அனுபவத்தை
மேம்படுத்துவதற்கும்,
அவர்களின் திறன்களை முழுமையாக வளர்ப்பதற்கும்
இந்த மாற்றங்கள் உதவும்
என நம்பப்படுகிறது
பாரத தேசம்
வலிமை பெற்றிட
உலகின் குருவாய் பாரதம்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட அண்டராயநல்லூர் மலட்டாரு பகுதியில் தினமும் பட்டப்பகலில் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அண்டராயநல்லர் மெயின் ரோட்டில் இருந்து மலட்டாறு பகுதியில் தினமும் காலை 11 மணி அளவில் இருந்து மாலை 4 மணி வரை திருவண்ணாமலை திருக்கோவிலூர் சங்கராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்களை வரவழைத்து பல லட்ச ரூபாய் வியாபார நோக்கத்தில் விபச்சார தொழில் கொடிகட்டி நடைபெற்று வருவதாக பரபரப்பு புகார் எழந்துள்ளது.
இந்த தொழில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக அதே இடத்தில் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *