அன்பு நண்பர்கள் கழக தோழர்கள் நமது *கடற்கரை” சேனலை *SUBSCRIBE* செய்ய வேண்டும்

அட்ஜஸ்ட்மென்ட் ! கொஞ்சம் லோன்.. அதிக வட்டி !
இது மாதிரி கொடூர வங்கி…

😩😲😨😱

சேலம்கோவை அரசு AC பஸ்சில் பயணம் செய்யும் பயணி களுக்கு ஒரு சில ஓட்டுநர் களால் ஏற்படும் அவல நிலை குறித்த கவலையால் இந்த பதிவு…..
கோவை சேலம்
1 To 1 – AC பேருந்துகளில் கோவையிலிருந்து சேலம் பயணம் செய்ய ஆசைப் படும் சேலம் பயணிகளை இரவு நேரங்களில் இந்த பேருந்து ஓட்டுநர் படுத்தும்பாடு சொல்லில் அடங்காதது…….
வழக்கமாக அனைத்து பேருந்துகளும் சேலம் பட்டர்பிளை பாலத்திலிருந்து கொண்டலாம்பட்டி பைபாஸ் சென்று அந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டிய பயணிகளை இறக்கிவிட்ட பின்னரே புதிய பேருந்து நிலையம் செல்வது வழக்கம்.
ஆனால் AC பேருந்தின் ஒரு சில டிரைவர்களோ அதில் பயணம் செய்யும் பயணிகளிடம் கொண்டலாம்பட்டியெல்லாம் செல்ல முடியாது வேண்டு மானால் உத்தம சோழபுரத்திலோ அல்லது திருவா கவுண்டனுர் பேருந்து நிறுத்தத்திலோ இறங்கி கொள்ளுங்கள் என்று அடாவடியாக இரவென்றும் பாராமல் நினைத்த இடங்களில் பயணிகளை இறக்கிவிட்டு செல்லும் அராஜகப் போக்கை வாடிக்கையாக கொண்டி ருகிறார்கள்.
அதைவிட கொடுமையாக 12.4.2025 அன்று கோவை காந்தி புரத்திலிருந்து சேலம் நோக்கி புறப்பட்ட TN302079 என்ற எண் கொண்ட AC பேருந்தில், (மேலே புகைப்படம் இணைக்க பட்டுள்ளது )
இடையில் ஒரு உணவகத்தில்
20 நிமிடம் பேருந்து நின்ற போது எடுத்தது) ஒரு கல்லூரி மாணவி ஒருவரும் பவானி லட்சுமி நகர் செல்வதற்காக பயணம் செய்தார்.(கோவையிலிருந்து புறப்படும் 1 டு 1 AC பேருந்துகள் இடையில் பவானி லட்சுமி நகர் பேருந்து நிறுத்ததில் மட்டும் டிக்கெட் அடிப்பதற்க்காக நிற்பது வழக்கம்)
அந்த பேருந்தின் ஓட்டுநர் இங்க பாருமா நீ லட்சுமி நகர்ல எறங்குனாலும் எங்க எறங்குனாலும் சரி சேலம்தான் டிக்கெட் எடுத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி சேலம் TICKET எடுக்க வைத்தார்.
அந்த பெண்ணும் எதுவும் பேசாமல் சேலம் டிக்கெட் எடுத்து கொண்டு பயணம் செய்தார்.
பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்த நிலையில், சேலம் போக்குவரத்து பணிமனையில் பொறியாளராக இருக்கும் அந்த பெண்ணின் அண்ணன் அந்த எதேச்சையாக தன் தங்கையாகிய அந்த பெண்ணுக்கு போன் செய்திருக்கிறார்,
அப்போது அந்த பெண்ணும் எதேச்சையாக நடந்த விபரங்களை அவரது அண்ணனிடம் சொல்லியுள்ளார்.
சிறிது நேரத்தில் யாரிடமிருந்தோ அந்த ஓட்டுநருக்கு போன் வந்தது. (வாகனத்தை இயக்கியபடியே
தான் போனும் பேசினார்)
உடனே முகம் மாறிய ஓட்டுநர், போனை பேசி முடித்த அடுத்த நொடியே இந்த பஸ்ல யாருமா லட்சுமி நகர் டிக்கெட்? என்று கடுப்பாக கேட்கவே அந்த மாணவி நான்தான் என்றார்.
மீண்டும் அவரிடம் மிரட்டும் தொணியில் கம்பளைண்ட் கொடுத்தியா? என்று ஓட்டுநர் கேட்க அந்த மாணவி சற்றே பயம் சூழ்ந்த முகத்துடன் இல்லை எங்கள் அண்ணனிடம் தான் சொன்னேன் என்றார்.
யார் உங்கள் அண்ணன் என்று திமிரான தொணியிலேயே அந்த ஓட்டுநர் கேட்க, சேலம் டிப்போவில் பொறியாளராக இருக்கும் _ அவர் தான் எங்கள் அண்ணன் என்று பதிலளித்தார்.
இதன் பிறகே அந்த ஓட்டுனரின் மிரட்டல் தொணியில் சிறிது மாற்றம் ஏற்பட்டது.
பின்னர் லட்சுமி நகர் பேருந்து நிறுத்தம் வரவே அங்கிருந்து ஏறிய பயணிகளின் பயணசீட்டில் ஏதோ அட்ஜஸ்ட் மெண்ட் செய்து அந்த பெண்ணிடம் சேலம் பயணசீட்டினை பெற்று கொண்டு அதிகமாக பெற்று 70ரூபாயை வைத்துக் கொள்ளும்மா என்று கூறி திருப்பி கொடுத்து சமாதானமாக பேசி அனுப்பினார் அந்த ஓட்டுநர்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள் அந்த பெண்ணின் சகோதரர் சேலம் பணிமனையின் பொறியாளர் என தெரிந்தததால் அந்த பெண்ணிற்கு நீதி கிடைத்தது, இது போல எத்தனை பேர் அந்த ஓட்டுநரின் அராஜக போக்கினால் தினசரி பாதிக்க படுவார்களோ?தெரியவில்லை.
இந்த பேருந்தின் ஓட்டுநர் பயணிகள் அனைவரிடமும் மிகவும் திமிராகவும் மரியாதை குறைவாகவுமே பேசி வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது….
இது போன்ற ஓட்டுனரின் நடவடிக்கை குறித்து புகார் செய்ய சேலம் டிப்போ மின்னஞ்சல் ஏதும் கிடைக்குமா? என தேடினால் அப்படி ஒன்று இருப்பதாக தெரியவில்லை.
இந்த பதிவு உரிய அதிகாரிகள் பார்வைக்கு செல்ல வேண்டும் , அதுவரை இது whatsup இல் வலம் வர வேண்டும் அந்த நடத்துநர் ஓட்டுநர்களுக்கு இதை ஒரு படிப்பினையாக ஆகும் வரை இதை சுழல விட்டு அவர்கள் ஆடி போகும் வரை பகிருங்கள்.
குறிப்பு: பேருந்து ஓட்டுநரை அடையாளம் காண வசதியாக அந்த பேருந்தில் எனக்கு வழங்கப்பட்ட பயணசீட்டு இதனுடன் இணைக்க
பட்டுள்ளது. அந்த ஆள் அலறியடித்து ஆட்டம் காணும் வரை இந்த பதிவு தொடரும் –
சேலம் மக்கள் உதவி & நல மன்றம்👆👆

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *