இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்த 23 புதிய குளிர்சாதனப் பேருந்துகள்!
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 23 புதிய அதிநவீன குளிர்சாதனப் பேருந்துகள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் ஐந்தாவது ஆண்டின் தொடக்கவிழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வர், கடந்த 07.05.2025 அன்று சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 214 புதிய பேருந்துகள் இயக்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேருந்துகளில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 27 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, முதல்வரின் உத்தரவுப்படி போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சர் சி.சிவசங்கரின் அறிவுறுத்தல்படி, இன்று ( 23.05.2025) முதல் 23 புதிய அதி நவீன குளிர்சாதன பேருந்துகள் கீழ்கண்ட தடங்களில் இயக்கப்படுகிறது.
கோடை விடுமுறை நிறைவு: பயணிகள் வசதிக்காக கூடுதல் ரெயில் பெட்டிகள்
கோடை காலம் முடிவடையும் நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ளதால் பயணிகளின் வசதிக்காக தற்காலிகமாக குறிப்பிட்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இது குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:-
கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, பின்வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில்க்கு செல்லும் (வண்டி எண்: 12689/12690 ) தினசரி இயக்கப்படும் நாகர்கோவில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் மே 25 -ல் இருந்து நிரந்திரமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
இணைக்கப்பட்ட பெட்டிகளின் விவரம்:
இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி – 2 பெட்டிகள் , மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி – 5 பெட்டிகள், ஸ்லீப்பர் வகுப்பு – 11 பெட்டிகள் , இரண்டாம் வகுப்பு இருக்கை , முன்பதிவில்லா பெட்டி தலா 2 பெட்டிகளுடன் மொத்தமாக 24 பெட்டிகள் இணைக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலம்பு எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும்:
தாம்பரம் – செங்கோட்டை, செங்கோட்டை – தாம்பரம் வண்டி எண்: 20681/20682 என இரு மார்க்கமாக வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து மே 23 முதல் ஜூன் 18, வரையும் செங்கோட்டை இருந்து மே 24 முதல் ஜூன் 19ம் தேதி, வரையும் தற்காலிகமாக கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் – நாகர்கோவில் 22657/22658 இரு மார்க்கமாக செல்லும் நாகர்கோவில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது.
தாம்பரம் இருந்து மே 25 முதல் ஜூன் 16ம் தேதி வரையும், நாகர்கோவில் இருந்து மே 26 முதல் ஜூன் 17ம் தேதி வரையும், தற்காலிகமாக கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி சேர்க்கப்படும்.
இணைக்கப்பட்ட பெட்டிகளின் விவரம்:
1- ஏசி முதல் வகுப்பு மற்றும் ஏசி இரண்டு வகுப்பு பெட்டிகள், 2- ஏசி இரண்டு வகுப்பு பெட்டிகள், 4- ஏசி மூன்று வகுப்பு பெட்டிகள், 11- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் & 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள்: மொத்தம் 24 பெட்டிகள்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📌 தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 – பிரிவு 2(j)
🔹 தகவலை “அறியும்” உரிமை என்ன?
பிரிவு 2(j)ன் கீழ், “அறியும் உரிமை” என்பது ஒரு குடிமகனுக்கு அரசு வைத்திருக்கும் தகவல்களை:
✔️ பார்வையிட
✔️ நகலெடுக்க
✔️ சான்றுகளைக் கவனிக்க
✔️ சுயமாக பதிவுசெய்ய (audio/video)
✔️ பதிவுகளின் சான்றினைப் பெற
என அனுமதிக்கிறது.
🔹 இதன் முக்கியத்துவம்:
✔️ பொதுமக்கள் அரசு செயல் முறைகளை நேரடியாக புரிந்து கொள்ள முடிகிறது.
✔️ ஊழல் தடுப்பு மற்றும் பொது பொறுப்புணர்வை ஊக்குவிக்கிறது.
📌 உதாரணம்:
நீங்கள் ஒரு அரசு அலுவலகத்தில் நடந்த தீர்மான கூட்டத்தின் பதிவுகளை பார்வையிட விரும்பினால், பிரிவு 2(j)ன் கீழ் அதை கோரலாம்.
RTI #RTISection2j #RightToInspect #InformationRights #Transparency #RTIAct2005 #CitizenPower #PublicRecords #KnowYourRights
அன்புடன் சென்னை பூந்தமல்லி சுரேஷ் சமூக ஆர்வலர்
கிரையபத்திரம பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!
😳😳😳😳😳😳😳😳😳😳😳
ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.
எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,
அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.
அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.
பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.
பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.
கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.
கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.
1.தானம்
அடமானம்
முன் கிரயம்
முன் அக்ரிமெண்ட்,
உயில்
செட்டில்மெண்ட்,
கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
ரெவின்யூ அட்டாச்மெண்ட்
வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.
1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.
சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.
இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .
கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.
தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
மக்கள் அனைவரும் அவரவர் V.A.O அலுவலகத்தில் மனு கொடுக்கலாம்….
என்னென்ன மனு கொடுக்கலாம்? …..
குடிநீர் பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள்.
சாலை பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
தெருவிளக்கு பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
மருத்துவமனை பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
பஞ்சாயத்து அலுவலகம் சார்ந்த பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
விஏஓ அலுவலகம் சார்ந்த பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
அரசு நலத் திட்டங்களில் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
நீர்நிலைகளை பாதுகாக்கவும் சார்ந்த மனுக்கள் .
கிராம நூலகம் அமைத்தல் சார்ந்த மனுக்கள் .
லஞ்சம் ஊழல் சம்பந்தமான மனுக்கள் .
பாலங்கள் கட்டுவது சம்மந்தமான மனுக்கள் .
மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நீங்கள் கொடுத்த மனுவுக்கு தீர்வு ஏற்படவில்லையா அது சார்ந்த மனுக்கள் .
கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு மேம்பாட்டு சார்ந்த மனுக்கள் .
முதியோர் பணம் பெறுதல் சம்பந்தமான மனுக்கள் .
விதவை , ஊனமுற்றோர் , அனாதைகள் பணம் பெருதல் சம்பந்தமான மனுக்கள் .
பட்டா , சிட்டா , அடங்கல் சம்பந்தமான மனுக்கள் .
சுடுகாட்டுக்கு பாதை அமைத்தல் , மின்விளக்கு அமைத்தல் , தண்ணீர் வசதி அளித்தல் சார்ந்த மனுக்கள் .
பேருந்து வசதி சம்பந்தமான மனுக்கள் .
ரேஷன் கடைகளில் உள்ள நிறை குறைகளை சம்பந்தமான மனுக்கள் .
சாலையோரங்களில் மரங்கள் நடுதல் சம்பந்தமான மனுக்கள் .
21 . பிரசவ நிதி பெறுதல் குறைபாடுகள் சம்பந்தமான மனுக்கள் .
நீராதாரம் பெருக்குவது சம்பந்தமான மனுக்கள் .
100 நாள் வேலைவாய்ப்பு பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
கிராமம் பாதுகாப்பு சம்பந்தமாக மனுக்கள் .
25 . தொகுப்பு வீடு மற்றும் பசுமை வீடுகள் சம்பந்தமான மனுக்கள் .
ரேஷன் கடை நிறை குறை சம்பந்தமான மனுக்கள் .
தாலிக்கு தங்கம் திட்டத்தில் நிறைகுறைகள் சம்மந்தமான மனுக்கள் .
தமிழக அரசு வழங்கும் ஆடு மாடு திட்டத்தில் இருக்கும் முறைகேடுகள் சம்பந்தமான மனுக்கள் .
மழை நீர் சேமிப்பு திட்டம் சம்பந்தமான மனுக்கள் .
அரசு வழங்கும் இமசடங்கு நிதி பெறுதல் சம்பந்தமான மனுக்கள் .
மின்சார பிரச்சினைகள் சார்ந்த மனுக்கள் .
தபால் துறையில் நிறை குறைகள் சார்ந்த மக்கள் .
பதிவுத் துறையில் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மனுவாக எழுதலாம்.🙏 பொது நலன் கருதி இவன் சென்னை பூந்தமல்லி சுரேஷ் சமூக ஆர்வலர் 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *