அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் (NHIS) மேலும் ஓராண்டு காலம் நீட்டித்து அரசு உத்தரவு.
வரும் 30.06.2025 முடிவடையும் நிலையில் மேலும் ஒரு ஆண்டு அதாவது 30.06.2026 முடிய நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
ஓய்வூதியர்களுக்கான மருத்துவக்காப்பீடு 30.06.2026 முடிய உள்ளதால் அவர்களுக்கு மாற்றம் இல்லை
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் (NHIS) மூலம்
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள்/அறுவை சிகிச்சைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையிலும் சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு பத்து லட்சம் ரூபாய் வரையும் உதவி பெறும் வசதி உள்ளது.
இந்த மருத்துவ உதவியின் காப்பீடு விபத்து தொடர்பான சிகிச்சைகளுக்கும் நீட்டிக்கப்படும்.
🛑🔵🛑
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கில் பூஜை செய்வது என அனைத்தும் தமிழில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
🛑🔵🛑
🔵 யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமறை பாடுவது என அனைத்தும் தமிழில் நடைபெறும்
🔵 திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது என அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறவுள்ளன
🔵 திருச்செந்தூர் கோயிலின் குடமுழுக்கை தமிழ் மொழியில் நடத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த வியனரசு தாக்கல் செய்த மனுவில் அரசு தரப்பு தகவலை அறிக்கையாக தர உத்தரவிடப்பட்டுள்ளது
🔵 திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது
🔵 திருச்செந்தூர் குடமுழுக்கு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளோடு தற்போதைய வழக்கையும் பட்டியலிட உத்தரவிட்டு ஆணையிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *