திருமங்கலம் விமான நிலையம் ரோடு.போக்குவரத்துக்கு பயனற்ற ரோடாக உள்ளது.எத்தனை முறை புகார் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை.மழை காலம் விபத்துக்கள் ஏற்படும் முன் விழித்து கொண்டு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போர் கால அடிப்படையில். வணக்கம்,உண்மையில் திருமங்கலம்-விடத்தக்குளம் விமான நிலையம் சாலை மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக காணப்படுகிறது இந்த சாலையை தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படி பயன்படுத்தும் மக்கள் அன்றாடம் எண்ணில் அடங்கா சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. பொதுவாக மேம்பாலப் பணி துவங்கும் முன்பே அந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்களுக்குபாலம் கட்ட ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர் முறையான சாலை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது விதி. ஆனால் திருமங்கலம் ரயில்வே மேம்பாலம் கட்டும்போது முறையான மாற்றுச்சாலை (அணுகு சாலை) வசதிகள் செய்யாமல் மேம்பாலம் கட்டுவதன் மர்மம் விளங்கவில்லை. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவது நமக்கு புரியாத புதிராகவே உள்ளது.இந்தப் பகுதிகளில் முறையான சாலை வசதிகளை செய்து கொடுக்கக்கோரி பல்வேறு மனுக்கள் நமது திருமங்கலம் தொகுதி ஊழல் ஒழிப்பு புரட்சி படை மற்றும் அகில இந்திய தகவல் மற்றும் சட்டம் முன்னணி(RTI and Legal Front) அமைப்பிற்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. தற்போது இந்த சாலையின் அவலங்கள் காணொளி மூலமாகவும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இனியும் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு முறையான சாலை வசதிகள் செய்து கொடுக்காமல் மேம்பாலம் கட்டும் பணி தொடர்ந்தால் பகுதி மக்களின் முழு ஆதரவுடன் முறையான அறிவிப்பு வழங்கி சாலை வசதிகள் செய்து கொடுக்கும் வரை சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு எதிராக முறையான சட்ட போராட்டம் தொடரும்.நன்றி வணக்கம் காரில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக பெண் ஒருவர் பேசிய ஆடியோ வெளியானது. https://youtu.be/TQF0hrUnAxQ?si=rPLr15oH8qnMlU7K Share The News Post navigation ✨முக்கிய செய்திகள்🎊 🎊முக்கிய செய்திகள்✍️