நாகரீக பிச்சை
பெரியார் அரசினர் கலை கல்லூரி – கடலூர்
-நாட்டு நலப்பணித் திட்டம் – மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா -2026 – விளம்பர ஏடு – தொடர்பாக
வாழ்க தமிழ்! வளர்க தமிழ் !
வணக்கம்,
மாவட்ட அளவிலான போட்டி இது எந்த மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மாவட்டமா? அல்லது வேறு மாநிலத்தில் நிகழவிருக்கும் போட்டியா ? இங்கு தமிழில் எதுவுமே இல்லை. தலைப்புகள் மட்டும் பெயரளவில் தமிழில் உள்ளது ஏன் அதையும் ஆங்கிலத்தில் எழுதிவிடலாமே! விளம்பர ஏடே ! தமிழில் அச்சடிக்க இயலவில்லை எனில் தமிழ் மொழி படிக்க/ எழுத தெரியாதவர்கள் உள்ளனர் என்ற உண்மை அறியும் போது சற்று கசப்பாகத்தான் இருக்கின்றது.
தமிழில் கவிதை கட்டுரை எழுதினால் எவ்வாறு? அதை தரம் காண்பர் ! எவ்வாறு ? மதிப்பளித்து பரிசு வழங்குவர்! என்ன இது சோதனை முச்சங்கம் வைத்து வளர்த்த தமிழுக்கு இந்த நிலையா? மிகவும் வேதனை. இதுபோன்ற செயல்களால் தான் தமிழ்மொழி தரம் குறைகிறது.
மற்ற மாநிலங்களில் அவர் அவர் தாய் மொழிக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றனர். தமிழன் மட்டும்தான் தரம்கெட்டவன். தன் தாய் மொழியை தரக்குறைவாக எண்ணுபவன். இது போன்ற அரசு கல்வி நிலையங்களிலேயே நிகழ்ந்தால் தமிழ் எவ்வாறு வாழும் ? இது போன்ற செயல்களால் நிறைய திறமயான மாணவர்கள் சரியான புரிதலும் தகவலும் அறியாமல் பங்குகொள்வதில்லை. பிறகு ஏன் இது போன்ற போட்டிகளில் நடத்துகிறார்கள். ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் தமிழில் சிலர் தரும் எச்ச காசை பிச்சை எடுக்கவா?
இதை வன்மையாக நான் கண்டிக்கின்றேன்.
ம விவேக் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், பாவேந்தர் பாரதிதாசன் தொழில் நுட்பக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
இணைப்பு: விளம்பர ஏடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *