✊ “
இன்று ஒரு கிராமத்தின் மாணவர்கள், பொதுமக்கள், முதியவர்கள்
உயிரை கையில் பிடித்துக் கொண்டு விறகுப் பாலம் கடந்து செல்லும் காட்சியை பார்க்கும்போது
என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை.
🔴 இது தான் திராவிட மாடலா?
வெள்ளியில் சிம்மாசனம் அமைக்கத் தெரியும்
மாநாடுகளுக்கு கோடிகளை மக்களின் வரிப்பணத்தை வாரி இறைக்கத் தெரியும்
ஆனால்
👉 பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக ஒரு பாதுகாப்பான பாலம் அமைக்கத் தெரியவில்லையா?
👉 அப்படியானால்,
கடந்த பல ஆண்டு அதிமுக, திமுக மாறி மாறி வரும் ஆட்சிக்காலத்தில்
இன்றைய ஆட்சியாளர்கள்
எங்கு இருந்தார்கள்?
அப்போது
இந்த கிராம வழிகளில் பயணம் செய்யவில்லையா?
இன்றைக்கு “மக்கள் தொண்டு” பேசும் நீங்கள்
அந்த நாட்களில் எந்த நாட்டில் குடியிருந்தீர்கள்? சில நடுநிலைவாதிகள் கூறுகிறார்கள்
📍 மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்திற்கு நேரடி கேள்வி
இந்த இடம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா?
👉 அப்படியானால்,
மாவட்ட ஆட்சியர்
மாவட்ட செயலாளர்கள்
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்
இந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார்களா?
இல்லையென்றால், 👉 இது நிர்வாகத் தோல்வி அல்லவா?
🏫 பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் அவலம்
இந்த கிராமத்திலிருந்து,
பள்ளி மாணவ மாணவிகள்
வேலைக்குச் செல்லும் பொதுமக்கள்
வயதானவர்கள்
அனைவரும் தினமும் உயிரைப் பணயம் வைத்து செல்லும் நிலை.
👉 இதைக் கண்டும்,
அரசுக்கு கண் தெரியவில்லையா?
“யாருமே குறை சொல்ல முடியாத ஆட்சி” என்று பேசும் முதல்வருக்கு இந்த காட்சி கண்ணில் படவில்லையா?
இந்த விவகாரத்தில், 👉 அனைத்துக் கட்சி சார்பில்
வெறும் அறிக்கையோடு நிற்காமல்,
களத்தில் இறங்கி
மாவட்ட நிர்வாகத்தை நிர்ப்பந்தித்து
உடனடியாக பாலம் கட்டும் பணியைத் தொடங்கச் செய்ய வேண்டும்.
👉 இது அரசியல் அல்ல,
👉 மனிதாபிமானம்.
💰 “பணம் இல்லையா?” – மிகப் பெரிய பொய்
கோடி கோடியாக:
ஊழலுக்கு பணம் இருக்கு
மாநாடுகளுக்கு பணம் இருக்கு
மேடைகள், விளம்பரங்கள், அலங்காரங்களுக்கு பணம் இருக்கு
👉 ஆனால், ஒரு கிராமத்துக்கு பாலம் கட்ட பணம் இல்லையா?
🔥 அனாவசிய செலவுகள் – நியாயமான கேள்விகள்
சமீப காலங்களில்:
திருவண்ணாமலையில்
இளைஞரணி மாநாடு
1,30,000 பேருக்கு
டி-ஷர்ட், தொப்பி, ஸ்நாக்ஸ், பிரியாணி மற்றும் மதுபானம்.
மேடை, விளம்பரம், அலங்காரம்
👉 ஒரு நபருக்கு குறைந்தது ₹3000 என்றால்,
1,30,000 × 3,000 = ₹39 கோடி தொண்டர்கள் மட்டுமே மகிழ்வுப்புக்கான செலவு
மேலும்,
வெள்ளிச் சிம்மாசனம் மொத்தத்தில் செலவு
👉 ₹50–60 கோடிக்கு மேல்
❓ கேள்வி:
இந்த ₹50–60 கோடியில்,
எத்தனை கிராமங்களுக்கு பாலம் கட்டியிருக்கலாம்?
எத்தனை பள்ளிகளுக்கு அடிப்படை வசதி செய்திருக்கலாம்?
எத்தனை அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தியிருக்கலாம்?
🧠 “கேட்டால் நீ சங்கியா?”
இந்த கேள்விகளை கேட்டால்,
“சங்கி” என்பார்கள்
“அரசு மீது பழி சுமத்துகிறார்கள்” என்பார்கள்
👉 ஆனால், செலவாகும் ஒவ்வொரு ரூபாயும்
மக்களின் வரிப்பணம்
என்பதை யாராலும் மறுக்க முடியாது.
👉 வரிப்பணத்திற்கு
கேள்வி கேட்பது
தேசவிரோதம் அல்ல,
குடிமகன் உரிமை.
🤝 நண்பர்களுக்கு நேரடி அழைப்பு
நாம் எல்லோரும்:
ஒரு வீடியோ பார்த்தால்
லைக் போடுகிறோம்
கமெண்ட் போடுகிறோம்
👉 அதோடு நமது பொறுப்பு முடிந்துவிடக்கூடாது.
“நம்ம பிள்ளைங்க தானே போகுது?”
என்ற உணர்வு வர வேண்டும்.
👉 எதிர்ப்பு தெரிவிப்போம்
👉 கண்டனம் பதிவு செய்வோம்
👉 நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை
அழுத்தம் கொடுப்போம்
✊ முடிவாக…
வெள்ளிச் சிம்மாசனம் அரசின் பெருமை அல்ல.
பாதுகாப்பான பாலம் தான் அரசின் உண்மையான அடையாளம்.
👉 மாணவர்களின் பாதுகாப்பு
👉 பொதுமக்களின் வாழ்க்கை
👉 அடிப்படை வசதிகள்
இதுதான் உண்மையான திராவிட மாடல் ஆக இருக்க வேண்டும்.
தமிழக அரசே!
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகமே!
இந்த பாலம் – இப்போதே – கட்டப்பட வேண்டும்.
✊✊✊✊✊✊
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் நல்ல ஒரு செயல் திட்டம் மற்றும் கட்டமைப்புக்கு உருவாக்கப்பட்டதே தவிர தனக்காகவும் தனது குடும்பத்தாரும் அனுபவிப்பதற்கு செய்து கொள்ளவில்லை அதேபோல் தனது கட்சிக்காகவும் அவர் தனக்காகவும் தனது பெருமைகளுக்காகவும் தற்பெருமை செலவு செய்து கொண்டது இல்லை என்பதை இந்த இடத்தில் நினைவுறுத்த வேண்டியுள்ளது
✊✊✊✊✊✊

Kindly Do Watch !!

Thanks

🛑 சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கம்!
சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14.25 லட்சம் பேர் நீக்கம்!
சென்னையில் S.I.R-க்கு முன் 40,04,694 வாக்காளர்கள் இருந்த நிலையில், S.I.R-க்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலில் 25,79,676 பேர் உள்ளனர்; 14,25,018 பேர் நீக்கம்.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.
திருச்சி மாவட்டத்தில் 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 3.24 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.
மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.
கடலூர் மாவட்டத்தில் 2.46 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.
அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கம்.
திருவண்ணாமலையில் 2,51,162 வாக்காளர்கள் நீக்கம்.
திருப்பூரில் 5,63,785 வாக்காளர்கள் நீக்கம்.
செங்கல்பட்டில் 7,01,871 வாக்காளர்கள் நீக்கம்.
நாகப்பட்டினத்தில் 57,338 வாக்காளர்கள் நீக்கம்.
காஞ்சிபுரத்தில் 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்.
வாக்காளர்கள் நீக்கம் – எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பின்.
விழுப்புரம்: 1.82 லட்சம்
திருநெல்வேலி: 2.16 லட்சம்
தென்காசி: 1.51 லட்சம்
தஞ்சாவூர்: 2,06,503
தூத்துக்குடி: 1.62 லட்சம்
நாமக்கல்: 1.93,706
சேலம்: 3.62 லட்சம்
முதல்வர் தொகுதியில் 1.03 லட்சம் பேர் நீக்கம்.
S.I.R-க்கு பின் முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 பேரும், துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் 89,241 பேரும் நீக்கம்.
எடப்பாடி தொகுதியில் 26,375 பெயர்கள் நீக்கம்!
விருதுநகரில் 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்!
திருவள்ளூரில் 6,19,777 வாக்காளர்கள் நீக்கம்!
காட்பாடி தொகுதியில் 35,666 வாக்காளர்கள் நீக்கம்!
கிருஷ்ணகிரியில் 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்!
தேனியில் 1,25,739 வாக்காளர்கள் நீக்கம்!
சிவகங்கையில் 1,50,828 வாக்காளர்கள் நீக்கம்!
ராமநாதபுரத்தில் 1,17,364 வாக்காளர்கள் நீக்கம்!
மயிலாடுதுறையில் 75,378 வாக்காளர்கள் நீக்கம்!
ஈரோட்டில் 3,25,429 வாக்காளர்கள் நீக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *