Written by

in

👀 மதுரை உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன்–சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு, ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களும் புதுப்பொலிவுடன் பிரகாசமாக மின்னி மிளிர்கின்றன.
கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கோபுரங்களில் உள்ள புராணச் சிற்பங்களுக்கு மூலிகை வண்ணங்கள் பூசப்பட்டு, தங்கக் கலசங்கள் செப்பனிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேக நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள், சிறப்புப் போக்குவரத்து வசதிகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத் துறையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன.
படிப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, ஆயிரம் கனவுகளோடு பயணிக்கும் ஒரு ஏழை கிராமத்து மாணவனின் எதிர்காலம் இன்று ஒற்றைப் பைக்குள் முடங்கிக் கிடக்கிறது.
​சங்ககிரியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் (M.E., அண்ணா பல்கலைக்கழகம்), கடந்த 03.09.2026 அன்று இரவு 10.00 மணிக்கு சென்னை கிளாம்பாக்கத்தில் (KCBT) இருந்து சேலம் நோக்கிய பேருந்தில் பயணித்துள்ளார். வழியில் அவரது சாம்பல் நிற (Grey Colour) பை தவறவிடப்பட்டுள்ளது அல்லது யாராலோ தவறுதலாக மாற்றி எடுக்கப்பட்டுள்ளது.
​காணாமல் போன பையில் உள்ளவை:
​அவரது மேற்படிப்பிற்கும் ஆராய்ச்சிக்கும் உயிர்நாடியான
​ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் (DL), ATM கார்டுகள்
​மொபைல் சார்ஜர்
​ஒரு சாதாரண மாணவனுக்கு லேப்டாப் என்பது வெறும் பொருள் அல்ல; அது அவனது இரவு நேர உழைப்பு, எதிர்காலக் கனவு, குடும்பத்தின் நம்பிக்கை. அந்தப் பை கிடைக்காவிட்டால் அவனது கல்வியும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும்.
​உறவுகள் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் அன்பான வேண்டுகோள்:
இந்தப் பை தவறுதலாக மாற்றி எடுக்கப்பட்டிருந்தால் அல்லது யாருக்கேனும் கண்டெடுக்கப்பட்டிருந்தால், தயவுசெய்து உடனடியாகக் கீழே உள்ள எண்ணிற்குத் தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
​சிறப்பு அறிவிப்பு:
இந்தப் பையைக் கண்டெடுத்து ஒப்படைக்க முன்வருபவர்கள் அல்லது தகவல் தெரிவித்து உதவுபவர்களின் அனைத்துப் பயணச் செலவுகளையும் “உறவுகள் உதவும் கரங்கள் அறக்கட்டளை” முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.
​பயண விவரங்கள்: TN30 N 2044 | Bus ID: S-3288 | Seat No: 39 | PNR: L85143285
​தொடர்புக்கு (பாலசுப்ரமணியம் M): 9345595367
​மனிதநேயம் இன்னும் மரணிக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய தருணம் இது. உங்கள் வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் நண்பர்களிடம் இந்தச் செய்தியைப் பகிர்ந்து, ஒரு ஏழை மாணவனின் கல்விக்கனவைக் காப்பாற்ற உதவுங்கள்!

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *