🕉️தவறாமல் அனைத்து குருப்பிலும் அனுப்பி விடவும். பள்ளி ஆசிரியர் மாணவர்கள் என அனைவருக்கும் செல்லட்டும்.
🇮🇳vhpரவி🕉️










மதுரவாயல் அருகே பிஎம்டபிள்யூ சொகுசு கார் மோதி இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்ட விபத்தில் தனியார் தொலைக்காட்சி கேமரா மேன் பரிதாபமாக உயிரிழந்தார் என்கிற செய்தி அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையும் அளிக்கிறது.சென்னை பாண்டி பஜார் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் குமார் (39). தனியார் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளர். இவர், பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஊழியராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மதுரவாயல் – தாம்பரம் பைபாஸில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்திற்கு பின்னே வேகமாக வந்த பிஎம்டபிள்யூ சொ சொகுசு கார் இடித்ததில்100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு புதரில் விழுந்த பிரதீப் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தால் பிஎம்டபிள்யூ காரின் சென்சார் துண்டிக்கப்பட்டதால் ஒரு கிலோமீட்டர் சென்றதும் கார் தானாக நின்றது. இதையடுத்து காரை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பிரதீப் குமாரின் சடலத்தை மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் சொகுசு கார் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை கண்டறிந்தனர். அத்துடன் அதை ஓட்டி வந்தவர் ஓட்டுநர் முரளி என்பதும், ஏர்போர்ட்டில் பயணி ஒருவரை இறக்கி விட்டு திரும்பும் போது விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய முரளி தற்போது தலைமறைவாக உள்ளதால் அவரை போலீஸ் சார் தேடி வருகின்றனர்.மறைந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பிரதீப் குமார் அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு பாதுகாப்பான முறையில் பத்திரிகையாளர்கள் பயணிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறோம். அரசு அடையாள அட்டை வைத்திருக்கிற மறைந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளருக்கு இத்தருணத்தில் தமிழ் நாடுஅரசு போதிய உதவிகளை நிச்சயம் வழங்கும் என்று நம்புகிறோம்.
-கீதப்பிரியன்.சென்னை பத்திரிகையாளர் மன்ற தலைவர் (பொறுப்பு).👇💐மக்கள் விழிப்புணர்வு செய்தி ஆழ்ந்த இரங்கல் வருந்துகிறோம்q💐

தமிழக தமிழகத்தில் டிஎஸ்பிகள் பணி மாற்றம் .சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் முத்துவேல் பாண்டி நாகை ஏடிஎஸ்பியாக மாற்றம். கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் நெல்லை மாவட்ட வள்ளியூர் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்தனர். தூத்துக்குடி குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி பொன்ராமு விருதுநகர் திருச்சுழி டிஎஸ்பியாக மாற்றம். திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் திருப்பூர் கொங்கு நகர காவல் உதவி ஆணையராக மாற்றம். நெல்லை வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் திருச்செந்தூர் டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்துள்ளனர்.




JUSTIN | தஞ்சாவூர்: மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.


சந்தி சிரிக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கால் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக வெட்டப்படும் காட்சிகள்.காவேரி மருத்துவமனை” மருத்துவர் பாலாஜி அரசு மருத்துவமனையில் வைத்து தாக்கப்பட்ட சம்பவத்தில் கதறிய தமிழக அரசு, வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றாமல் மௌனம் காப்பது ஏன் என வழக்கறிஞர்கள் ஆவேசம்…?தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவில் சீரழிந்து போய் உள்ளது. அதற்கு உதாரணமாக ஓசூரில் வழக்கறிஞர் கண்ணன் நீதிமன்ற வளாகத்திலேயே பட்டப்பகலில் கொடூரமாக வெட்டப்படும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்ல இன்று காலை தஞ்சாவூரில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவமும் ஒரே நாளில் அரங்கேறி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் குமரி மாவட்டத்தில் வழக்கறிஞர் ஒருவரை கடத்திக் கொண்டு சென்று வெட்டி கொலை செய்து எரித்த சம்பவத்தின் சுவடுகள் மறையும் முன்னர் அதாவது14 ஆவது நாளில் ஓசூரில் வழக்கறிஞர் சீருடையில் கையில் வழக்கு ஆவணங்களுடன் நீதிமன்ற வளாகத்தில் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது நீதிமன்ற வளாகத்திலேயே கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் முழு நேர மருத்துவராகவும் கிண்டி கலைஞர் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் ஒரு சில மணி நேரங்கள் மட்டும் பணிபுரிந்து விட்டு முழு நேர அரசு சம்பளம் பெறும் மருத்துவர் பாலாஜி அவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் அமைச்சர் மற்றும் துணை முதல்வர் உட்பட முக்கிய விஐபிகள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து சென்று மருத்துவர் பாலாஜிக்கு ஆறுதல் கூறியதாக செய்து வெளியானது. அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய கூடாது என்பதும் தனியாக மருத்துவமனை வைத்துக்கொள்ள கூடாது என்பதும் மருத்துவத் துறையில் சட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் கிளினிக்குகளில் பணிபுரிந்து வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களை தனது கிளினிக்கு அல்லது தான் பணி புரியும் தனியார் மருத்துவமனைக்கு அரசு மருத்துவர்கள் அழைப்பதும் அது குறித்த சம்பவங்கள் அவ்வப்போது செய்தியாக வெளியானதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தான் காவேரி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியும் பணிபுரிந்து வருவதும் தனது தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்காமல் சிகிச்சை பதிவேடு நோட் புத்தகத்தை முகத்தில் தூக்கி எறிந்ததாக கூறி இளைஞர் ஒருவர் மருத்துவரை தாக்கியதாக செய்திகள் வெளியானது. மேலும் மருத்துவரை தாக்கிய இளைஞரை சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கொடூரமாக தாக்கும் வீடியோவும் வெளியானது. ஆனால் அது குறித்து அந்த இளைஞரின் தாயாரால் கொடுக்கப்பட்ட புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற செய்தியும் வெளியானது. மருத்துவர் தாக்கப்பட்ட உடனேயே மருத்துவமனை வளாகங்களில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் என்று கூறியதுடன் கிண்டி கலைஞர் பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டதுடன் நோயாளிகளை பார்க்கச் செல்வோர் மற்றும் நோயாளிகளுக்கு அடையாள கைப்பட்டை அணியும் வைபவங்களும் அரங்கேறியது. ஆனால் மருத்துவ தவறுகளுக்கும் அந்த மருத்துவ தவறுகளால் உயிரிழக்கும் அப்பாவிகளுக்கும் விடிவு காலம் பிறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு, தனியார் மருத்துவமனையிலும் அரசு மருத்துவமனையிலும் பணிபுரிந்து வரும் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட உடன் விழித்தெழுந்தது போல் தமிழகமெங்கும் பல்வேறு வழக்கறிஞர்கள் பல்வேறு சம்பவங்களில் கொலை செய்யப்பட்டதும் தாக்கப்பட்டதுமான சம்பவங்களில் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற கூட நடவடிக்கை எடுக்காதது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சட்டம் ஒழுங்கில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது நீதிமன்றங்கள் என்பதை கூட தமிழக அரசு கணக்கில் கொள்ளாதது ஏன் என்பதுதான் புரியவில்லை. தற்போது நீதிமன்ற வளாகங்களிலேயே சமூக விரோதிகளால் வழக்கறிஞர்கள் தாக்கப்படும் நிலையில் நாளை இதுபோன்ற சட்டவிரோத கும்பல்களால் நீதிபதிகளும் தாக்குதலுக்கு உள்ளாக மாட்டார்கள் என்பது மட்டும் என்ன உத்தரவாதம் என்பதுதான் தற்போதைய நிலையின் கேள்வியாக உள்ளது. தற்போதைய தமிழக முதல்வரின் தகப்பனார் இறந்தபோது அவருடைய நல்லடக்கத்திற்காக நள்ளிரவில் நீதிமன்ற கதவுகளை தட்டுவதற்கு வழக்கறிஞர்கள் தேவைப்பட்டார்கள் அந்த வழக்கறிஞர்கள் தான் மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்ய வாதாடி உத்தரவு பெற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதும் தமிழக அரசின் பல்வேறு வழக்குகளுக்கும் வழக்கறிஞர்கள் தேவைப்படும் நிலையில் அந்த வழக்கறிஞர்கள் பாதுகாப்புடன் வாழ வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது என்பதுதான் வழக்கறிஞர்களின் வியப்பு கலந்த அதிர்ச்சியாக உள்ளது. நீதிமன்றத்திலேயே வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சகட்டம் தான் என்பது மறக்க இயலாத உண்மையாக உள்ளது. பல்வேறு கட்ட போராட்டங்களை வழக்கறிஞர் சங்கங்கள் முன்னெடுத்தும் இதுவரையும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது தான் வழக்கறிஞர்கள் மீது நடைபெறும் கொலை வெறி தாக்குதல்களுக்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது. வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிமன்ற வளாகங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைப்பதுடன் அரசு மருத்துவமனைக்குள் செல்வோருக்கு கையில் பட்டை கட்டும் வைபவங்கள் போல நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்காடிகள் மற்றும் நீதிமன்றத்திற்கு செல்வோருக்கு கூட ஏன் நீதிமன்ற வளாக வாயிலேயே உயர் நீதிமன்றத்திற்கு அளிக்கும் பாதுகாப்பை போல ஏன் பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு அரசு தயங்குகிறது என்பதுதான் தெரியவில்லை என்று இன்றைய சம்பவத்தை முன்வைத்து ஆவேசத்துடன் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆகவே வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றும் வரை தொடர் நீதிமன்ற முற்றுகையில் ஈடுபட்டால் நீதிமன்ற பணிகள் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன் சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடும் என்பதால் உடனடியாக தமிழக அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதோடு நீதிமன்ற வளாகங்களில் காவல்துறை மூலம் பாதுகாப்பு அளிப்பதோடு சட்டவிரோத ஆயுதங்கள் கொண்டு செல்வதையும் தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்பானவர்கள் மட்டுமே ஆஜராவதையும் உறுதிப்படுத்த தக்க நடவடிக்கை எடுத்து நீதிமன்றங்களுக்கும் பாதுகாப்பு அளித்தால் மட்டுமே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை சந்தி சிரிக்காத அளவிற்காவது தடுக்க முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.





