முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார்.தனது 92 ஆவது வயதில் காலமாகியுள்ளார் அருமையான கானொலி👌👌எல்லோரு சிந்தித்து செயல் பட வேண்டிய விஷயம்👏 திண்டுக்கல் அருகே கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த 4 இளைஞர்கள் கைது…திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த கணேஷ்(30) என்பவர் மொட்டணம்பட்டி, ஜம்ஜம் நகரில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நண்பர்களான இந்திரகுமார் மற்றும் செல்வம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த விக்ரமன்(27), ராகுல்(21), சரவணன்(19), விக்டர்ஆண்டனி(19) ஆகிய 4 பேர் கணேசின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.2500 பணத்தைப் பறித்து சென்றது தொடர்பாக தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்… சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்திற்குள் அவர் எப்படி நுழைந்தார்? பல்கலைக்கழகத்தில் உள்ள நுழைவு வாயில்கள் எத்தனை? பாதுகாப்பு குறைபாடுகள் என்ன? என்பதை விரிவாக தெரிந்துகொள்வோம்.37 வயதான ஞானசேகரன் அதே கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே இந்த பகுதியில் இருப்பதால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்ளே எப்படி செல்வது எப்படி வெளியே வருவது என்ற அனைத்து விவரங்களும் தெரிந்து வைத்துள்ளார். பல்கலைக்கழகத்தின் பின்பகுதியை உள்ள சூர்யா நகர் வழியாக பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடி இவர் சென்று வந்துள்ளார்.கோட்டூர்புரத்திற்கு எதிரே உள்ள சாலையில் கூவம் நதி கரையை ஒட்டி அமைந்துள்ளது சூர்யா நகர் பகுதி. அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்பகுதியில் கடைசி பகுதி என்பதால் ஆள் நடமாட்டம் இல்லாமல் போதிய வெளிச்சமும் இல்லாமல் இந்தப் பகுதி உள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஞானசேகரன், இரவு நேரத்தில் இந்த பகுதி வழியாக சுவரில் ஏறி குதித்து பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளே சென்றுள்ளார் என்கிறது காவல்துறை.அடிக்கடி இதே வேலையாக இந்த பகுதியில் சுற்றி வந்த ஞானசேகரன், தனியாக இருக்கும் மாணவிகள் மற்றும் ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் மாணவிகள் என்று பலரிடம் தான் போலீஸ் என்று பேச்சுக் கொடுத்துள்ளார். அதே போன்று ஆண் நண்பர்களுடன் பேசிவரும் பெண்களையும் குறிவைத்து இது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இவருடன் கூட்டாளியாக சென்றது யார்? யார்? என்பது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர். செங்கோட்டையில் விதிமுறையை மீறி வந்த கனிமவள லாரிக்கு அபராதம் விதிப்பு .தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கனிம வள வாகனம் செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தை மீறி வந்த TN 76 AU 3960 என்ற வாகனத்திற்கு செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S. பாலமுருகன் அவர்கள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார்கள். Share The News Post navigation இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் விழிப்புணர்வு செய்திகள் உள்ளே Today news &Awerness news