கிராம நத்தத்தில் பயனுள்ள நிலம்.. மேய்க்கால் புறம்போக்கு.. மேய்ச்சல் நிலத்துக்கு பட்டா கிடைக்குமா
நிலங்களில் எத்தனையோ வகைகள் உள்ளன..
இதில் மேய்க்கால் புறம்போக்கு என்றால் என்ன தெரியுமா?
இந்த வகை நிலத்தின் முக்கியத்துவம், பயன்பாடுகள் என்ன?
இந்த மேய்ச்சல் நிலங்களுக்கு பட்டா கோர முடியுமா?
தமிழ்நாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களில் பல வகைகள் உள்ளன
1,மேய்ச்சல் நிலங்கள்,
2,தரிசு நிலங்கள்,
3,கடற்கரை,
4,ஆறு,
5,ஓடை,
6,வாய்க்கால் போன்ற நீர்நிலைகள்,
7,சாலை,
8,இடுகாடு,
9,நத்தம் புறம்போக்கு நிலம் போன்றவற்றை சொல்லலாம்.
10,இதில் மேய்க்கால் நிலம் என்பது, கிராமத்தில் ஆடு மாடுகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலமாகும்…
எனவே, எப்போதுமே மழைக்காலங்களில் மேய்ச்சல் நிலங்கள் பசுமையாகவும், கோடைக்காலங்களில் மேய்ச்சல் நிலங்கள் வறண்டும் காணப்படும்.
மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளின் கழிவுகளை சேர்த்து, பிறகு, அதை வயல்களில் உரமாக பயன்படுத்துவார்கள்..
பனை மரங்கள்: இந்த மேய்ச்சல் நிலங்கள்தான், கால்நடைகளின் முக்கிய மேய்ச்சல் ஆதாரமாகும்..
இந்த மேய்க்கால் நிலங்களில், குடை வேல், கருவேலம், விருவெட்டு, காரை, தொரட்டி, சிறுகுமிழ் மரங்கள் காணப்படும்.. சில இடங்களில் பனை மரங்களையும் காண முடியும்..
இந்த நிலத்தை ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலம் என்பார்கள். அதாவது, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி, கண்மாய் போன்ற நீர் வழி தடங்களில் இருக்கக்கூடிய இடத்துக்குதான் மேய்க்கால் நிலம் என்பார்கள்.. இதனை பொதுமக்கள் உரிமை கொண்டாட முடியாது.
பட்டா கோரலாமா: முழுக்க முழுக்க ஆடு மாடு மேய்ப்பதற்காக அரசாங்கமே ஒதுக்கியிருக்கும் நிலமாகும்..
கால்நடை வளர்ப்பவர்கள் பராமரித்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில் அரசு சார்பில் செயல்பட்டு வருபவை…
மயானம், சாலை, காடுகளை போல, இந்த மேய்க்கால நிலங்களையும், தனிநபர் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.
அதேபோல, இந்த நிலங்களை விலைக்கு வாங்க முடியாது.. இதற்கு பட்டாவும் கோர முடியாது..
ஆனாலும், மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழகத்தில் ஆங்காங்கே குடியிருப்புகள் முளைத்தன..
இந்த நிலத்தை கால்நடைகளை மேய்ப்பதற்கு பயன்படுத்தாமல், தனிப்பட்ட முறையில், பொதுமக்களில் சிலர் உபயோகித்து கொள்வதாகவும், இந்த இடங்களில் வீடுகள், கடைகளை கட்டிக்கொண்டு சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி கொள்வதாகவும் புகார்கள் எழுந்தன..
இது தொடர்பான வழக்கு விசாரணையும் ஹைகோர்ட்டில் நடந்தது..
அதிரடி உத்தரவு: இறுதியில், கடந்த 2021வரை கிட்டத்தட்ட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேய்க்கால் நிலங்களில் வசித்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
இறுதியில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் இனிமேல் யாருமே ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என்று ஹைகோர்ட் சமீபத்தில் அதிரடியாக உத்தரவை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
💐100%நம்பிக்கையோடு இயற்கை விவசாயிகளிடம் இருந்து தங்களுக்கு வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
💐இயற்கை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும் நீங்களும் உங்கள் வருங்கால தலைமுறையினரும் ஆரோக்கியமாக வாழ 100% இயற்கை முறையில் விளைந்த உணவுப் பொருட்களால் மட்டுமே சாத்தியம்.
💐உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் ஆரோக்கியமாக வாழ இந்த தகவலை மற்ற வாட்ஸ் அப் குழுக்களுக்கு பகிர்ந்து உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நாள்:06.04.2025
நேரம்: காலை 7 .00 முதல் 10.00 வரை
இடம்: அருண் மெஸ்,
KKG திருமண மண்டபம் எதிரில்,
கோட்டாம்பட்டி.
பொள்ளாச்சி.
தொடர்புக்கு 9080739280
91591 95795
மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்க் ஐ கிளிக்செய்யவும்.
https://chat.whatsapp.com/CH4n1WA7qG30fUPsksNc9U

https://chat.whatsapp.com/CH4n1WA7qG30fUPsksNc9U





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *