அனைத்து நமது சங்க உறவுகளுக்கும் வணக்கம்.
தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் புதிய முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வாழ்த்தி சுவரொட்டிகள் போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படம் மாடல் மட்டுமே அதில் மாற்றங்களும் செய்யப்படும்.
பிரதிநிதிகள் உங்களுக்கு முழு விருப்பம் இருந்தால் மட்டுமே போஸ்டர்கள் போடுவதற்கு முன் வரலாம்.
காரணம் பல பிரதிநிதிகள் வேறு வேறு கட்சிகளை சார்ந்து இருப்பீர்கள் ஆகவே அவர்களுக்கு இந்த முடிவு தர்மசங்கரத்தை ஏற்படுத்தும். வேறு கட்சிகளை சார்ந்திருப்பவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம். மற்றபடி நமது சங்கம் எந்த கட்சியையும் சாராமல் இயங்கிக் கொண்டிருப்பதால் வாழ்த்து போஸ்டர் போடுவதற்கு விருப்பம் உள்ள பிரதிநிதிகள் மட்டும் தலைமையை தொடர்பு கொள்ளுங்கள்.
வேறு ஏதாவது ஆரோக்கியமான ஆலோசனை இருந்தாலும் தலைமையை அணுகி விவரங்களை பதிவு செய்யலாம்.
நன்றி என்றும் உங்கள் நலனில் தலைவர்
ஆ. வேல்முருகன்
🛡️மாற்றம் வரும்னு நம்பின மக்கள்… வந்தது மின் கட்டண மாற்றம் தான் ⚡🙄
இந்த புதிய மின் கட்டணத்தில் முக்கியமான மாற்றம் என்னனா
முன்னாடி 500 யூனிட் வரை பயன்படுத்துறவர்களுக்கு இருந்த சலுகை இப்போ 400 யூனிட் வரை மட்டும்.
அதாவது நடுத்தர குடும்பங்களுக்கு தான் அதிக பாதிப்பு இருக்கும். 👇
பழைய கட்டணம் (500 யூனிட் வரை)
1–100 : இலவசம்
101–400 : ₹4.70
401–500 : ₹6.30
புதிய கட்டணம் (மே 10 முதல்)
1–200 : இலவசம்
201–400 : ₹4.70
401–500 : ₹6.30
இதை பார்த்தா பெரிய மாற்றம் இல்ல மாதிரி தெரியும்.
ஆனா உண்மையான பாதிப்பு 500 யூனிட் மேல் பயன்படுத்துறவர்களுக்கு தான்.
முக்கிய வேறுபாடு
முன்பு:
500 யூனிட் தாண்டினாலும் சிலருக்கு கட்டணம் comparatively குறைவாக இருந்தது.
இப்போது:
500 யூனிட் தாண்டின உடனே slab rate அதிகரிக்குது:
501–600 → ₹8.40
601–800 → ₹9.45
801–1000 → ₹10.50
1000 மேல் → ₹11.55
யாருக்கு பாதிப்பு அதிகம்?
பாதிப்பு குறைவு:
Fan, light மட்டும் use பண்ணுற small family
200–350 unit use பண்ணுறவர்கள்
பாதிப்பு அதிகம்:
AC use பண்ணுற family
Washing machine, heater, fridge அதிகம் use
500+ unit monthly consumption இருக்கும் வீடுகள்
Example:
ஒரு வீடு 450 unit use பண்ணினா:
பெரிய மாற்றம் தெரியாது.
ஆனா 650 unit use பண்ணினா:
500க்கு மேல உள்ள 150 unitக்கு அதிக rate வரும்.
Bill noticeably அதிகரிக்கும்.
Overall impact:
இந்த tariff structure பார்த்தா
“குறைவா பயன்படுத்துறவர்களுக்கு சலுகை… அதிகமா பயன்படுத்துறவர்களுக்கு கூடுதல் கட்டணம்” என்ற மாதிரி design பண்ணிருக்காங்க.
அதனால் middle class + AC பயன்படுத்துற குடும்பங்களுக்குத்தான் bill shock வர வாய்ப்பு அதிகம்.
🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏
🇮🇳19-05-26🇮🇳.
இன்றைய செய்திகள்
19.05.2026(செவ்வாய்க்கிழமை)
🌹நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும் வலிக்கும் என்ற எண்ணம் இருந்தாலே போதும்..
துரோகமும் பழிவாங்கும் எண்ணமும் எப்பவுமே நமக்கு தோன்றாது.!
🌹🌹துணிவு தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில்…
திமிர் இருக்கும்!
உண்மையும் நேர்மையும் இருக்கும் இடத்தில்… கோவம் இருக்கும்.!!
🌹🌹🌹பணம் சம்பாதிக்க நல்லவன்,கெட்டவன் எல்லோராலும் முடியும்.
ஆனால்,மனுசங்களை சம்பாதிக்க நல்ல மனசுள்ள மனிதனால் மட்டும் தான் முடியும்.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎽🎽பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு
👉நாளை மே 20-ம் தேதி
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
முடிவுகள் வெளியிடப்படும்.
👉ஜூன் 1-ம் தேதி முதல்
4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு
வரை பள்ளிகள் திறக்கப்படும்.
👉ஜூன் 4-ம் தேதி முதல்
1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு
வரை பள்ளிகள் திறக்கப்படும்.
பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
🎽🎽அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து பள்ளிக் கல்வி அமைச்சரின் அறிவுரைகள் குறித்து செய்தி வெளியீடு
🎽🎽2025-2026ஆம் நிதியாண்டின் வருமான வரிக் கணக்கை தாக்கல் (Income Tax Returns) செய்வதற்கான இணையதளம் 15.05.2026 முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
🎽🎽நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தனிப்பயிற்சி அளிக்கும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
🎽🎽TNPSC கள உதவியாளர் (Field Assistant) ஆன்-ஸ்கிரீன் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு
🎽🎽சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களின் ஆன்-ஸ்கிரீன் மதிப்பீட்டு முறை பிழையற்றது: ஒன்றிய கல்வி அமைச்சகம் விளக்கம்
🎽🎽தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மீன்வளப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் இணையவழி விண்ணப்பப் பதிவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துவக்கி வைத்தார்
🎽🎽மறுமதிப்பீடு கட்டணம் குறைப்பு
CBSE பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் நகல் பெறும் கட்டணங்கள் குறைப்பு
முன்பு விடைத்தாளின் நகலைப் பெற ரூ.700 கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.100 செலுத்தினால் போதுமானது என தெரிவிப்பு
🎽🎽மும்பை – 10ம் வகுப்பில் 55% மதிப்பெண் எடுத்த மகனின் சான்றிதழை கேக்கில் அச்சடித்து கொண்டாடிய பெற்றோர்
மும்பையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 55% மதிப்பெண்கள் எடுத்த மகனின் மதிப்பெண் சான்றிதழை கேக்கில் அச்சிட்டு வெட்டிக் கொண்டாடிய பெற்றோர்.
எங்கள் மகனை மற்றவர்களுடன் ஒப்பிட்டு வருத்தப்பட வைப்பதற்கு பதிலாக அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறோம் என பெற்றோர் தெரிவிப்பு
🎽🎽தமிழ்நாடு அரசுக்கு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம்
சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா?
தமிழ்நாடு அரசுக்கு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம்
இத்தகைய அடக்குமுறைகளுக்கு எல்லாம் அஞ்சி ஒரு போதும் மாணவர்கள் ஒடுங்க மாட்டார்கள் என்றும் கண்டிப்பு. 🎽🎽வங்கி கணக்கில் இருந்து தானாகவே பணம் எடுக்கும் வசதி மின் கட்டணம் செலுத்துவதில் புதிய முறை அறிமுகம் அதிகாரிகள் தகவல் (பத்திரிக்கைச் செய்தி)
🎽🎽”புதிய அரசுக்கு திமுக தொந்தரவாக இருக்காது.. ஆனால் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம்..
தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசு அமைந்துள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த திமுக தொந்தரவாக இருக்காது.
ஆனால், இயலாமையை மறைக்க அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம்
மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
🎽🎽”திரை உலகத்திற்காக தனது உயிரை பணையமாக வைத்து போராடியவர் எங்களது தந்தை கே.ராஜன்”
சென்னையில் தயாரிப்பாளர் கே.ராஜனின் மகன் அன்பு மற்றும் மகள் ராஜேஸ்வரி உருக்கம்
🎽🎽”UAPA சட்டத்தின் கீழ், கைதானவர்களுக்கு ஜாமின் வழங்கலாம்..” -உச்ச நீதிமன்றம் அதிரடி
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ், கைதானவர்களுக்கு ஜாமின் வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு!
குற்றம் நிரூபிக்கப்படாமல் நீண்டகாலம் சிறையில் அடைபட்டிருப்போருக்கு ஜாமின் மறுக்கக்கூடாது.
UAPA வழக்குகளில் கைதானவர்களில் வெறும் 6% மட்டுமே குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கருத்து
🎽🎽எரிபொருள் பயன்பாட்டை குறைக்க குறைக்க நாட்டில் நிலவும் வெப்பம் குறையும்.
எனவே மக்கள் எரிபொருள் பயன்பாட்டை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதுபாஜக மூத்த தலைவர் மனோஜ் திவாரி கருத்து
🎽🎽சிறிது காலம் அரசியலில் இருந்து ஓய்வு!
கடந்த 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இடைவிடாமல் பணியாற்றினேன். நேரம் மற்றும் கால அட்டவணை முழுவதும் நானே தீர்மானிக்கும் சுதந்திரத்துடன், அரசியலில் இருந்து சில வாரங்கள் ஓய்வெடுக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. எழுதிவரும் புத்தகப் பணிகளை இந்த ஓய்வு காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளேன்.
60 வயதை கடந்த நிலையில் உடல்நலன் மற்றும் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்த விரும்புகிறேன். பொதுச் சேவையில் எனது ஆர்வம் குறையவில்லை; புத்துணர்ச்சியுடன் மீண்டும் வருவேன்.
முன்னாள் திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
🎽🎽பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் தங்களின் செலவுகளைக் குறைக்குமாறு நிதியமைச்சகம் உத்தரவு
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செலவைக் குறைக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த நிதியமைச்சகம் உத்தரவு.
அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்து, கூட்டங்களை காணொளி மூலம் நடத்தவும், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதிலாக மின் வாகனங்களுக்கு படிப்படியாக மாறவும் அறிவுறுத்தல்.
🎽🎽ஈரானுக்கு நேரம் குறைந்துகொண்டே செல்வதாக ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் – அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை முடங்கியுள்ள சூழலில், ஈரானுக்கு நேரம் குறைந்து கொண்டே செல்வதாக ட்ரம்ப் எச்சரிக்கை.
வேகமாக செயல்படாவிட்டால் ஈரானில் எதுவும் மிஞ்சியிருக்காது என்றும் மிரட்டியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை இதுவரை இயல்பு நிலைக்குத் திரும்பாததால் உலக நாடுகள் தவிப்பு.
🎽🎽அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்
அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கும் சூழலில்,இன்று (மே 19) காலை 9 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு வருமாறு, மா.செ.க்களுக்கு தொலைபேசி வாயிலாக இபிஎஸ் அழைப்பு
🎽🎽கர்நாடக மாநிலம் குடகு அருகே முகாமில் யானைகளை ரசித்துக் கொண்டிருந்த போது விபரீதம்.
கர்நாடகா துபாரே முகாமில் காவிரியாற்றில் யானைகள் நீராடும்போது 2 யானைகள் இடையே சண்டையில் சிக்கி கணவன் மற்றும் 6 வயது குழந்தையின் கண் முன்னே உயிரிழந்தார் 33 வயதான பெண்.
கஞ்சன் என்ற யானை ஆக்ரோஷமாக மார்த்தாண்டா என்ற யானையை முட்டி கீழே தள்ளியது.
யானை விழுந்ததில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஜின்மு (33) உயிரிழந்தார்
🎽🎽கேரளத்தில் ஜூன் 15ம் தேதி முதல் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் அமலாகிறது
அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்
புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் வி.டி.சதீசன் இலவச பேருந்து பயணத் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார்
🎽🎽காதலியை கல்லால் கொடூரமாக தாக்கிய வாலிபர்
திருச்சி காஜாமலை தந்தை பெரியார் கல்லூரி அருகே, ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை அவரது காதலன் கல்லால் முகத்தில் கொடூரமாக தாக்கியுள்ளார்.
காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது.
பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதி.
தப்பியோட முயன்ற வாலிபரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள், கே.கே.நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
🎽🎽3 நாளில் ரூ.120.75 கோடி வசூல்
சூர்யாவின் கருப்பு திரைப்படம்
3 நாளில் உலகளவில் ரூ.120 கோடி வசூல். இந்தியாவில் மட்டும் ரூ.78 கோடி வசூலித்துள்ளது
🎽🎽ரூபாய் மதிப்பு வரலாறு காணாத ‘வீழ்ச்சி
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் 96.19ஆக சரிவு
🎽🎽”ஏதோ நாம் தோத்துவிட்டது போலவும் அதுவும் படுதோல்வி அடைஞ்ச மாதிரி இத்தோட தி.மு.க கதை முடிஞ்சிருச்சுனு சொல்றாங்க..
நாம் சோகமாக இருக்கவேண்டிய அவசியமே இல்லை.. ”ஸ்டாலின் பேச்சு.
🎽🎽குழந்தை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தாலிபான் அரசு
மௌனம் சம்மதமா?
ஆப்கானிஸ்தானில் பெண்களிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்கும்போது மௌனமாக இருந்தால், சம்மதமாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்ற சர்ச்சை சட்டத்தை கொண்டு வந்தது தாலிபான் அரசு
திருமணம், விவாகரத்து உள்ளிட்டவை தொடர்பாக 31 விதிகள் அடங்கிய புதிய குடும்பச் சட்டத்தை கொண்டு வந்த தாலிபான் அரசு, குழந்தை திருமணங்களுக்கும் சட்டப்பூர்வ அனுமதி அளித்துள்ளது.
🎽🎽அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை இலாகா ஒதுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது.
திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை எந்த அனுபவமும் இல்லாத ராஜ்மோகனிடம் நாங்கள் எங்கள் கோரிக்கை வைப்பது சரியாக இருக்குமா?
30 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த முதலமைச்சர் விஜயிடம் வைப்பது சரியாக இருக்குமா?
அமைச்சர் ராஜ்மோகனை சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் இதை சொல்லவில்லை. இது என்னுடைய கருத்து மட்டுமே”
விஷால், தென்னிந்திய நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர்.
🎽🎽திருச்சி விமான நிலையம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளித்த தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள்
🎽🎽விஜய் ஆட்சிக்கு இன்னும் 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும்
புதியவர்களை குறைத்தும் மதிப்பிடக்கூடாது, அதிகமும் எதிர்பார்க்கக்கூடாது
மநீம தலைவர் கமல்ஹாசன்
🎽🎽அமெரிக்காவில் வான் சாகசத்தில் ஈடுபட்ட 2 விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து
விமானங்கள் தரையில் விழுந்து வெடித்த நிலையில் பாராசூட் மூலம் உயிர்தப்பிய 4 விமானிகள்
🎽🎽பிரதமர் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்’ என்ற விருதை வழங்கினார் அந்நாட்டு இளவரசி விக்டோரியா.
🎽🎽”தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தால், எங்களது ஆதரவை தொடர்வது குறித்து நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்வோம்
விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்
🎽🎽”திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்..
குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதால் மட்டுமே தவெகவுக்கு ஆதரவு
விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்
🎽🎽கொள்கை அரசியலில் தி.மு.க என்றும் தோற்காது
நாம் தேர்தல் அரசியலில் தோல்வி அடைந்தாலும், கொள்கை அரசியலில் தோற்க மாட்டோம்
திருவாரூரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்
&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *