மணவாளக்குறிச்சி மணல் ஆலை 40 ஆண்டுகால திட்ட அடிப்படையில் 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் மணலில் இருக்கும் கனிமங்களை பிரித்து எடுக்க முடிவு செய்துள்ளது.
கடற்கரை கிராமங்களில் ஒரு ஏக்கர் பட்டா நிலத்தில் உள்ள மணலில் கனிமங்களை 11 மாதத்தில் பிரித்து எடுக்க உரிமையாளருக்கு ரூபாய் 45 லட்சம் கொடுப்பதுடன் எஞ்சிய மணலை எடுத்த இடத்தில் கொட்டிவிடுகிறார்கள்.
மணலில் காணப்படும் கதிர்வீச்சும் குறைந்து விடுகிறது, இதனால் புற்றுநோய் போன்ற
நோய்கள் பாதிப்பிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
மீனவர் அல்லாத ஏனைய கிராம மக்களும் பயனடைகிறார்கள்.
மாவட்ட வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் இத்திட்டத்தை செயல்படுத்த மக்களிடம் கருத்து கேட்பு தேவை இல்லை என்ற நிலையில், மாவட்ட நிர்வாக அனுமதி மட்டுமே போதுமானது ஆகும்.
கடந்த ஒரு வருடமாக காங்கிரஸாரும்,கிறிஸ்தவ மத குருமார்களும் கைகோர்த்து கொண்டு அரசியல் சுயநலத்திற்காக மீனவ மக்களை தூண்டி இத்திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது அமைதியாக இருக்கும் குமரி மாவட்டத்தில் மக்களிடம் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.
மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என்ற நிலையில் மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று திட்டத்தை செயல்படுத்தலாம் , இந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதிக்காமல் காலம் கடத்தி வருகிறார்.
உடனடியாக அனுமதி கொடுத்து திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டு
இன்று பா.ஜ.க தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு மாவட்ட தலைவர் மதுசூதனபெருமாள் தலைமையில் ,கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் இராஜேந்திரன்,மாவட்ட தன்னார்வ தொண்டுநிறுவன பிரிவு செயலாளர்கள் கண்ணன்,ரெதீஷ்,ரமேஷ்சுந்தர்,வெனீஷ் ,கஜேந்திரன் ஆட்சியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தோம்.
மனுவை பெற்றுகொண்டு விபரத்தை கேட்டு அறிந்த மாவட்ட ஆட்சியர் இது அரசு பாலிசி நான் ஒண்ணும் பண்ணமுடியாது என கூறிவிட்டார்.
மகிழ்சி என கூறிவிட்டு வந்துவிட்டோம்.
மக்கள்விரோத,தேசவிரோத சக்திகளுக்கு துணைபோகும் காங்கிரஸ்,த.வெ.க ,வி.சி.க கூட்டணி அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
எங்கள் நிர்வாகிகளுடனும்,மாவட்ட பா.ஜ.க தலைவருடனும் கலந்து ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
தேசபக்தன்
பா.மதுசூதனபெருமாள்.
TNAssembly #TNnews #mathusoothanaperumal #BreakingNews #tamilnadupolitics #FlashNews
பாட்டிலுக்கு இனி ரூ.10 கூடுதலா கேட்பீங்க.. டாஸ்மாக் கடையை கோர்ட்டுக்கு இழுத்து ரூ.6,000 பெற்ற நபர்!
தமிழகத்தில் டாஸ்மாக்கில் எம்ஆர்பி விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தான் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய டாஸ்மாக் கடையை நுகர்வோர் நீதிமன்றத்துக்கு இழுத்து ரூ.6 ஆயிரம் இழப்பீடு பெற்றுள்ளார் ஒருவர். என்ன நடந்தது? என்பது பற்றி பார்க்கலாம்.
சென்னை மாதவரத்தில் 8924 என்ற எண்ணில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக்கில் தேவராஜன் என்பவர் சென்றார். அவர் 180 மில்லி மதுபானம் வாங்கினார். அதன் எம்ஆர்பி விலை ரூ.140 ஆகும். ஆனால் அவரிடம் ‘டெபிட் கார்டு’ மூலம் ரூ.150 வாங்கப்பட்டது.
எம்ஆர்பி (பாட்டிலின் அதிகபட்ச விலை) விலையை விட ரூ.10 அதிகம் வசூலித்ததால் அவர் அதிருப்தி அடைந்தார். மேலும் அதற்கான பில் தரும்படி கேட்டார். ஆனால் டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் பில் கொடுக்க மறுத்துவிட்டார். அதேபோல் கூடுதலாக வசூலித்த ரூ.10யையும் கொடுக்கவில்லை. இந்த சம்பவம் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி நடந்தது.
இதுதொடர்பாக தேவராஜன் சென்னை (வடக்கு) நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், ”மதுபான விற்பனை என்பது நுகர்வோர் பாதுகாப்பு சட்ட வரம்பிற்குள் வராது. இதனால் புகார் அளித்த நபர் நுகர்வோராக கருத முடியாது. இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் இந்த வாதத்தை நுகர்வோர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ”எம்ஆர்வி விலையை விட கூடுதலாக ரூ.10 டாஸ்மாக் கடை வாங்கி உள்ளது. அதற்கான பில்லை வழங்க மறுத்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019ன் அடிப்படையில் பார்த்தால் பில் வழங்க தவறுவதும், குறிப்பிட்ட பொருளின் மீது அச்சிடப்பட்ட எம்ஆர்பி விலையை விட ரூ.10 அதிகமாக வசூலிப்பதும் சேவை குறைபாடாக கருதப்படுகிறது. அதோடு இது நியாயமற்ற வர்த்தக நடைமுறையாக கருதப்படுகிறது. இதனால் இந்த வழக்கு பொருந்தும்.
எனவே கூடுதலாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாய் உட்பட மொத்தம் 5,000 ரூபாயை இழப்பீடாகவும், வழக்குச் செலவுக்காக 1,000 ரூபாயையும் இரண்டு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு டாஸ்மாக் கடை சார்பில் வழங்க வேண்டும். இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் வழங்காவிட்டால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தப்படும் நாள் வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் அந்த தொகையை வழங்க வேண்டும் என்று கூறி அதிரடியாக உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரையும் பொறுப்பாக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அது ஏற்கப்படவில்லை. பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சேவை குறைபாட்டிற்கு குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் கடை மட்டுமே பொறுப்பேற்க முடியும்.ஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் ஏதுமில்லை. டாஸ்மாக் நிர்வாகத்தை குற்றவாளியாக்க முடியாது எனக்கூறியதோடு டாஸ்மாக் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய கோரிக்கையையும் நிராகரித்தது.
அதேவேளையில் இப்படியான சேவை குறைபாட்டை கட்டுப்படுத்துவதற்கான நிர்வாக நடவடிக்கைகளை அமல்படுத்துவது டாஸ்மாக் நிறுவனத்தின் பொறுப்பு என்று அறிவுரை வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *