கோவையில்
சிறப்பு படை எஸ்.எஸ்.ஐ. ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கைது
கோவை மத்திய மண்டல உதவி ஆணையராக பணியாற்றி வருபவர் கோகுலகிருஷ்ணன். இவரது தலைமையில் செயல்படும் சிறப்பு படையை (special team) சேர்ந்த எஸ்.எஸ்.ஐ. பூபதி என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையில் இன்று (17ம் தேதி) சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் திருநெல்வேலி மேல கரையை சேர்ந்த ரிஜையனா பாத்திமா எனபரிடம் ஒரு காரை ‘பிட்டிங்’ (கடனுக்கு ஈடாக) வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரவிக்குமார் தனது காரை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தியதை அறிந்த ரிஜையனா பாத்திமாவின் கணவர் தன்னிடம் உள்ள மற்றொரு காரின் சாவியை பயன்படுத்தி பொள்ளாச்சிக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து ரவிக்குமார் தனது நண்பரான காட்டூர் சிறப்பு படை (special team) எஸ்.எஸ்.ஐ. பூபதியிடம் புகார் தெரிவித்ததாகவும், இதை தொடர்ந்து ரிஜையனா பாத்திமா மற்றும் அவரது கணவரை அழைத்து அவர்களிடம் இருந்த செல்போன்களை பறித்துக்கொண்ட எஸ்.எஸ்.ஐ. பூபதி, செல்போன்கள் மற்றும் காரை ஒப்படைக்க வேண்டும் என்றால் தனது மேல் அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரிஜையனா பாத்திமா லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர்களின் ஆலோசனை பேரில் முன்பணமாக ரூ.70 ஆயிரம் கொடுக்க ரிஜையனா பாத்திமா ஒப்புக் கொண்டு பூபதியிடம் கோவை உக்கடம் காவல் நிலையத்தில் வைத்து ரூ.70 ஆயிரம் லஞ்ச பணம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு துறையினர் எஸ்.எஸ்.ஐ.பூபதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இவர் எந்த உயர் அதிகாரிக்காக லஞ்சம் வாங்கினார். லஞ்சமாக பெறும் பணத்தை யார் யாருக்கு பிரித்து கொடுப்பார், இவரை காப்பாற்றுபவர்கள் யார்? யார்? இவரது பிண்ணணி என்ன? இது போன்று இவர் சம்பாதித்த பணத்தில் தனது பெயரிலும், தனது மனைவி, மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்து உள்ளார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தனிப்படை போலீசார் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் போது அவர்கள் மீது மட்டுமே துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆணையிடும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது. ஊழலற்ற நிர்வாகம் அளிக்க முயற்சி செய்யும் முதல்வர் விஜய் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *