👮🏻‍♂️போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு👮🏻‍♀️
திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 1 முதல் 31 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரதீப் அவர்கள் உத்தரவின் படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சிபின் அவர்கள் மேற்பார்வையில் நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு. பழனிச்சாமி தலைமையிலான போக்குவரத்து காவல் துறையினர் திண்டுக்கல் நகரின் முக்கிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வரும் நபர்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், கார், பேருந்து, சரக்கு வாகனம், வேன் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியும், சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சி மற்றும் ஒளிரும் பட்டை வழங்கி இரவில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
Dindigul district reporter rajapandiyanselvan
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
༺꧁᪣ நம் தமிழக காவல் துறை Press& Media only police department News᪣꧂༻
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
👮🏻‍♂️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா👮🏻‍♀️
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ராணி மேல்நிலைப்பள்ளி அருகே புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன், இ.கா.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பொது மக்களின் பாதுகாப்பு கருதியும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் தற்போது இப்பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்து கொள்ளலாம் எனவும், இந்த புறக்காவல் நிலையம் 24 மணிநேரமும் செயல்படக்கூடியது என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சதீஷ்குமார், அம்பாசமுத்திரம் காவல் நிலைய ஆய்வாளர், திரு. ரமேஷ் கண்ணன் உதவி ஆய்வாளர்கள், திரு. மேதாஜி சிதம்பரம், திரு. ஆனந்த பாலசுப்பிரமணியன், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Nellai district reporter swaminathan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *