


✍️கடனை வசூலிக்க டார்ச்சர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம் – கர்நாடகா அரசு அதிரடி சட்டம்.கடன் வாங்கியோரை, கடன் கேட்டு டார்ச்சர் செய்தால், 10 ஆண்டுகள் சிறை மற்றும் 5 லட்சம் அபராதம், நிலுவையில் உள்ள கடன் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும் என கர்நாடக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனத்திடம் கடன் பெற்றவர்கள் அந்த கடனை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்ட முடியவில்லை என்றால், ஒரு கட்டத்திற்கு மேல் கடன் பெற்றவர்களை தொடர்பு கொண்டு,கடனை உடனடியாக திருப்பி செலுத்தும்படி நிறுவனத்தால் வற்புறுத்தப்படுவார்கள்.குறிப்பாக கிரெடிட் கார்டு மற்றும் கடன் வழங்கும் செயலிகள் மூலம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழலில் கடன் கொடுத்தவர்களின் டார்ச்சர் தாளாமல் ஏற்படும் தற்கொலை, அவதூறுகளைத் தடுக்க இந்த அவசர சட்டம்இதற்கு முடிவு கட்ட கர்நாடக அரசு, சிறுகடன் சட்டத்தில் (MicroFinance) கட்டாய நடவடிக்கைகளை தடுத்தல் என்ற திருத்தத்தை கொண்டு வந்தது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. எனினும் கடன் கொடுத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கூறி இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்து மாநில அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.✍️

வடக்கு மாநகரம் அண்ணா காலனி பகுதிக்குட்பட்ட 22 வது வட்டக் கழகத்தில் உள்ள அருள்மிகு , கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணி துவக்க விழாவில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் க.செல்வராஜ் MLA அவர்களும் வடக்கு மாநகர கழக செயலாளர் மாண்புமிகு மேயர் ந தினேஷ் குமார் அவர்கள் மாவட்ட அவைத் தலைவர் க.நடராசன் அவர்கள் பகுதி செயலாளர்கள் மின்னல் நாகராஜ்/உசேன் /வடக்கு மாநகர பொருளாளர் சரவண குமார்/22 வது வட்ட மாமன்ற உறுப்பினர். .ராதாகிருஷ்ணன் /வட்டக்கழக செயலாளர் ராஜ்குமார் /தொண்டர் படை குப்புசாமி/திராவிட பாலு/ அன்பு/ மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்.


கழகத் துணை பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய அக்கா திருமதி கனிமொழி கருணாநிதி MP அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை (11/02/25)செவ்வாய் கிழமை அன்று மதியம் சுமார் 12 மணியளவில் பாண்டியன் நகர் பகுதிக் கழகத்திற்க்கு உட்பட்ட 6-வது வார்டு கிழக்கு நல்லாத்துப் பாளையத்தில் மகளிர் சார்பாக அந்தப் பகுதிக் கழகத்திற்க்கு உட்பட்ட பகுதி தொண்டரணி துணைஅமைப்பாளர் .திருமதி.Roja அவர்கள் ஏற்பாட்டில் மகளிர் சுமார்50பேர்இணைந்து வைக்கும்சமத்துவப்பொங்கல்மற்றும்500பேருக்கு அன்னதானம் மேலும் மகளிருக்கானக் கோலப் போட்டிமிகவும்சிறப்பான முறையில் நமது திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளரும் திருப்பூர் தெற்குச் சட்ட மன்றத் தொகுதி உறுப்பினருமான அண்ணன்.திரு.க.செல்வராஐ்.,M.L.A.,அவர்கள்தலைமையில்மாநகரச்செயலாளர்.திரு.T.K.T.நாகராஐ் அவர்கள்மற்றும்திரு.Dineshkumar மேயர்.அவர்கள்முன்னிலையிலும்நடைப்பெறஉள்ளது.அதுசமயம்அனைத்துமாவட்ட,மாநகர,பகுதி,ஒன்றிய,நகர,பேரூர்கழகமகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணிநிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டுசிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..திரும்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்.
ப.கலைச்செல்வி.,M.Sc.M.Phil.,திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர்.திருமதி.அ.ஆனந்தி.







அன்பார்ந்த மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் 1.மேல்விஷாரம் நகராட்சி அலுவலகம் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்ற வருவதால் அந்த வழியாக வரும் பிரதான குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி ஓர் இரண்டு நாட்களில் நிறைவு பெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஆற்றில் இருந்த கேபிள் வயர் சமூக விரோதிகள் திருட முயற்சித்த பொழுது கேபிள் வயரை துண்டு துண்டாக வெட்டி விட்டனர் நல்ல வேலை அதை தடுத்து நிறுத்தப்பட்டது. ஆற்றிலுள்ள ஏழு கிணறுகளில் இருந்து தெங்கால் பாலம் வழியாக கேபிள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- வேலூர் (பம்ப் ஹவுஸ்) நீரூற்று நிலையத்திலிருந்து இயங்கி கொண்டிருந்த மோட்டாரை மாற்றி ஈஸ்வரன் கோயில் தலைமை நீரூற்று நிலையத்தில் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.
- தலைமை நீரூற்று நிலையங்களில் இருக்கும் குடிநீர் தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளை அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
- அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் வால்வு அமைக்கும் பணி முடிந்துள்ளது.
- அப்பணியை மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் (பொ)
- S.குல்சார் அஹமத் அவர்களநகராட்சி ஆணையாளர் திரு கோ பழனி அவர்களநகராட்சி பொறியாளர் திரு சரவணன் ஆகியோர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.நகர மன்ற உறுப்பினர்கள..S ஜபர் அஹமத்.P.இம்தியாஸ் அஹமத்.K.முபாரக் பாஷா. T ஹனீப் பாஷாகழக நிர்வாகிகள.AK.ஜாபர் அல.AB.முஜம்மில் இலாஹி P.முஹம்மத் இம்ரான் G.சின்னப்பையன் மற்றும் வால்வு பொருத்துநர் முனவர் கான் அனைவரும் உடன் இருந்தனர்.அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு நிரந்தர தீர்வு காணும் வேண்டுமென்று மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பணிகளும் கடந்த ஒரு வார காலமாக பணிகள் நடைபெற்று வந்த இதன் காரணமாக சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. டேங்க் குடிநீர் மட்டும் வைத்துக் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் மாற்று வழி ஏற்பாட்டில் குடிநீர் விநியோகம் செய்து வந்ததால் மேடான பகுதிகளுக்கு சீரான முறையில் குடிநீர் சென்று அடையவில்லை.அனைத்து பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளதால் ஒர் இரண்டு நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் விநியோகிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அனைவரும் இதற்காக துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் இ ங்ஙனம்:.S குல்சார் அஹமத்.நகர மன்ற தலைவர் (பொ).மேல்விஷாரம் நகராட்சி




