
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை: 4தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.பணி: மருந்தாளுநர் (Pharmacist)மொத்த காலியிடங்கள்: 425சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,30,400தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மருந்தியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து தமிழ்நாடு மருத்தியல் கவுன்சிலில் (பார்மசி) சான்றிதழை பதிவு செய்து, ஆண்டுதோறும் புதுப்பித்திருக்க வேண்டும்.வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில் தமிழ்மொழித் தேர்வு ஒரு மணி நேரமும், கணினி வழியில் மருத்தியல் தேர்வு 2 மணி நேரமும் நடைபெறும். தேர்வுக்கான தேர்வு பின்னர்அறிவிக்கப்படும்.தகுதியுள்ளவிண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை இணைதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். தேர்வு நுழைவுச்சீட் அஞ்சல் மூலம் அனுப்பப்படாது. தேர்வு நுழைவுச்சீட் பதிவு செய்வதற்கான தகவல் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.500, மற்ற அனைத்து இதர பிரிவினரும் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்விண்ணப்பிக்கவும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.3.2025மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.



சென்னை பெருநகர மாநகராட்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமார குருபரன் அவர்களை பெயரை அவதூறு செய்யவும், சென்னை பெருநகர மேயர் பிரியா அவர்கள் பெயரை அவப்பெயர் ஏற்படுத்தி வரும் வகையில்சென்னை மாநகராட்சி மண்டலம் -5 ல் குறிப்பிட்ட ஒரு சில வார்டுகளில் சென்னை மாநகராட்சியில் பணியில் இல்லாத நபர்கள் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் என்று போலி அடையாள அட்டை வழக்கிய நபர்கள் மீது புகார்லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கிய நபர்களை வைத்து ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முழுவதும் மாத மாதம் லட்சக்கணக்கில் லஞ்சமாக பெறும் நபர்கள் மீதும் புகார்ஹோட்டல், நிறுவனங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், சென்னை மாநகராட்சி நிறுவனங்கள் மீதும் போலியான முறையில் ஆவணத்தை தயார் செய்து அத்துமீறி பணம் வசூலிப்பவர் மீது புகார் 3/03/2025 நாளை காலை .11.30 மணியளவில் ஆவணங்களோடு சென்னை மாநகராட்சி மண்டலம் 5-ல் உள்ள வடசென்னை வடக்கு மாவட்ட சென்னை மாநகராட்சி இணை ஆணையர் அவர்களிடம் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் தலைமையில் புகார்இவண்
சமூகஆர்வலர்.ஆர்.டி.ஐ.செல்வம்
இந்து மக்கள் கழகம் -தமிழகம்
மாநில தலைவர்
தொடர்புக்கு -9884049794










