ByKarmegham

May 27, 2025
🛡️தமிழகத்தில் புதியதாக 11 அரசு கலைக் கல்லூரிகள் துவக்கம்.
உயர்கல்வித் துறை சார்பில், கடலூர் மாவட்டம் – பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் – குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் – நத்தம், சென்னை மாவட்டம் – ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் – விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் – செய்யூர், சிவகங்கை மாவட்டம் – மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் – முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் – திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் – கொளக்காநத்தம், தூத்துக்குடி மாவட்டம் – ஒட்டப்பிடாரம், ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கம்.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த கல்லூரிகளை துவக்கி வைத்தார்.
இந்த 11 கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏
🇮🇳26-05-25🇮🇳.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *