பாவேந்தர் பாரதிதாசன் தொழில்நுட்ப கல்லூரி 07-03-2026 (A Group of SRM Institutions- Pudukkottai Campus) மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமதி S.நிர்மலாராணி Administrative Officer, One stop Centre, Pudukkottai. கலந்துகொண்டார். உடன் கல்லூரி முதல்வர் துறை தலைவர்கள் பேராசிரியர்க மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் சமூக நலத்துறையின் கீழ் நடை பெற்ற குழந்தை திருமணம் ஒழிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் நடைபெற்ற மௌன மொழி போட்டியில் முதல் பரிசு பெட்ர மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.மாணவி அபிரமி மூன்றாம் ஆண்டு DMLT பெண்களின் பெருமைகளை பற்றியும் சிறப்புகள் பற்றியும் உரையாற்றினார்.பெண்ணே!நீயின்றி அமையாது உலகெனின்நின் அறிவின்றி அமையாது ஒழுக்குஎன்ற வரிகளில் இருந்து மாணவி தன் பேச்சை தொடங்கினார்.பெண்கள் இன்று ராணுவம் விமானம் ஓட்டுதல் மருத்துவம் காவல்துறை போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.விழி தெரியாமல்செவி கேளாமல்வழி புரியாமல்மொழி அறியாமல்திரியும் தகைசால் அறிஞர்களின் குறிப்புகளையும் அறிந்து செயல்படுபவள் பெண். அறிவின் ஊற்று ஆரம்பக்கல்வி ஆசிரியை.மாமமன்னர் ராஜ ராஜ சோழனின் அவையில் வீற்றிருந்து அறிவுரை கூறி நல்லாட்சி நடைபெற உறுதுணையாக இருந்தது குந்தவை பிராட்டியார் என்னும் ஓர் பெண்.சேர சோழ பாண்டிய மன்னர்கள் மூவேந்தர்களையும் எதிர்த்து பெண்ணை ஆற்றை வடபெண்ணை தென்பெண்ணை என இரண்டாக பிரித்து வள்ளல் பாரியின் மகளுக்கும் மனம் முடித்தவளும் , ஒருபடி மேலே சென்று முக்கண் மகன் முருகனுக்கும் அறிவுரை கூறியவள் ஒவ்வை என்னும் ஓர் பெண்.இது பெண் கல்வி அறிவில் சிறந்து விளங்கியதர்க்கான ஓர் உதாரணம்.விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை காக்க தன் கணவனையே துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியவள் நீரா ஆரிஇந்திய சீனா போரில் 300 சீனா வீர்ர்களை சுட்டுக்கொல்ல ஜஸ்வந்த் சிங் ராவத் என்னும் வீரருக்கு உதவியவர்கள் சோலா மற்றும் நீரா என்ற இரண்டு பெண்கள்இவர்களின் வீரம் பெண்கள் தாய் நாட்டின் மீது வைத்துள்ள பற்றை இவ்வுலகிற்கு பறைசாற்றுகிறது.தேவதாசி முறை ஒழிக்க சட்டசபையில் குரல் கொடுத்து வெற்றி கண்டவர் சட்டமன்ற உறுப்பினர் சத்யவானி முத்து. முதல் பெண் மருத்துவர் ஆனந்தி கோபால் ஜோஷி பெண் பொறியாளர் ஸோமயாஜீலு லலிதா போன்றவர்கள்சமுதாயத்தில் பெண்களின் பங்கு இன்றியமையாதது எனபதற்கு ஓர் சிறு உதாரணம்.உலகம் அறிந்த ஒரேமொழி பசி ஒரே கடவுள் உணவுஎன்பதை அறிந்து உணவளிப்பவள் பெண்.பெண்மையை போற்றுவோம்என்று தனது உரையை முடித்தார். செல்வி பரணிஸ்ரீ மூன்றாம் மாணவி ஆண்டு DMLT நன்றி கூற மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. Share The News Post navigation 💐important news முக்கிய 🙋♀️செய்திகள்💐 💐முக்கிய செய்திகள்💐