தமிழ்நாடு காவல் துறையில் ஆன்லைன் எப்.ஐ.ஆர் சேவை வந்தாச்சு: 🚨
இனி வீட்டில் இருந்தே புகார் செய்யலாம்🔥
தமிழ்நாடு காவல் துறை, வலைதள முதல் தகவல் அறிக்கையை (Online FIR)சமீபத்தில் துவங்கியது. இந்த புது சேவையின் மூலம் புகார் தொடுக்க விரும்பும் நபர்கள் காவல் நிலையம் சென்றுதான் புகார் கொடுக்க வேண்டும் என்ற நிலையை தவிர்த்து வீட்டில் இருந்தப்படியே இணையத்தின் உதவியுடன் புகார் கொடுக்கலாம்.
இந்த வசதி தமிழ்நாடு மட்டுமின்றி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹரியானா, உத்திரபிரதேசம் போன்ற இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது.
இந்த ஆன்லைன் எப்.ஐ.ஆர் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் தவறாக பயன்படுத்தினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.👀
இந்த சேவையின் மூலம் தமிழ்நாட்டில் உறைவிடம் கொண்டவர்கள் புகார் கொடுக்கலாம்.
தவறான புகார்களை பதிவேற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
தவறான தகவல்களை பதிவேற்றம் செய்யும் புகார்தாரர் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்கு தொடரப்படும்.
உங்கள் புகார்களை பதிவு செய்ய இந்த இணையத்தளத்திற்கு செல்லவும்
http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?1
மேலேக் கொடுக்கப்பட்டுள்ள இணையத்தள முகவரிக்கு சென்றப் பின்
District: உங்கள் மாவட்டம் தேர்வு செய்யவும்(எ.கா: சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர்)
Name: புகார் கொடுக்க விரும்புவரின் பெயர் பதிவு செய்யவும்
Date of Birth: புகார் கொடுக்க விரும்புவரின் பிறந்த தேதி பதிவு செய்யவும்
Address: புகார் கொடுக்க விரும்புவரின் முகவரி பதிவு செய்யவும்
Mobile Number: புகார் கொடுக்க விரும்புவரின் அலைப்பேசி எண் பதிவு செய்யவும்
Email ID: புகார் கொடுக்க விரும்புவரின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்
Subject: உங்கள் புகார் எந்த வகை என்பதை தேர்வு செய்ய வேண்டும்
Date of Occurrence: நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற தேதி பதிவு செய்யவும்
Place of occurrence: நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற இடத்தை பதிவு செய்யவும்
Discription: உங்கள் புகாரை முழுமையாக இங்கே பதிவுசெய்யலாம்
Want to attach Documents
[Max. 4MB(PDF, PNG, JPEG) Files alowed]:
உங்கள் புகார் தொடர்பாக ஏதேனும் கோப்புகளை இணைக்க வேண்டுமென்றால் அந்த கோப்புகள் அதிகப்பட்சமாக 4MB க்குள்ளாகவும் PDF, PNG, JPEG போன்ற வடிவங்களில் இருத்தால் மட்டும் பதிவேற்றம் செய்ய இயலும்.
Security Code:
இவை அனைத்தும் நிறைவு செய்தப் பிறகு கொடுக்கப்பட்டுள்ள பாதுக்காப்பு குறியீட்டு எண்னைப் பதிவு செய்ய வேண்டும்
Register:
அனைத்தும் செய்து முடித்தப் பிறகு உங்கள் புகாரை பதிவு செய்து நீங்கள் பதிவு செய்ததற்கான ரசீது மற்றும் எப்.ஐ.ஆர் எண் உங்களுக்கு வழங்கப்படும்.
Tamilnadu Police Citizen Portal என்ற இணையத்தளத்தில் உங்கள் எப்.ஐ.ஆர் எண்னைப் பயன்படுத்தி உங்கள் புகார் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இது போன்ற தொழிநுட்ப்ப முன்னேற்றஙநேரத்தையும், அலைச்சல், மன அழுத்தம் போன்றவற்றை அதிகளவில் குறைப்பதோடு குற்றங்களுக்கான http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/Compla
காசோலை கொடுத்தவர் தேதியிட்டு வழங்குகிறார்.
காசோலை வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் அதை காசோலை பெற்றவர் வங்கி கணக்கில் போட்டு பணத்தை வசூலிக்க வேண்டும்.
( முன்பு, காசோலை பெறபட்ட தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு செல்லும் )
காசோலை பெற்றவர் அதனை வங்கியில் போடுகிறார்.வங்கியில் காசோலை கொடுத்தவர் அக்கவுண்டில் பணம் இல்லை என்று அந்த காசோலை திருப்பித் தரப்பட்டு, வங்கியில் இருந்து அதற்கான மெமோ காசோலை பெற்றவரிடம் வழங்கப்படுகிறது.
‪#‎சட்ட‬ ‪#‎அறிவிப்பு‬ ‪#‎வழங்க‬ ‪#‎வேண்டும்‬ :
**.காசோலை வழங்கியவர் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்து, வங்கி அதற்கான மெமோ வழங்கும் வழங்கும் பட்சத்தில், அந்த மெமொ பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் காசோலை வழங்கியவருக்கு ஒரு சட்டப்படியான அறிவிப்பை காசோலையை பெற்றவர் வழங்க வேண்டும்.
இந்த அறிவிப்பு வழங்குவது மிக கட்டாயமானதாகும்.
‪#‎என்ன‬ ‪#‎செய்ய‬ #வேண்டும் : 1

காசோலையை கொடுத்தவருக்கு முறைப்படி சட்ட அறிவிப்பை காசோலையை பெற்றவர் அனுப்புகிறார்.
.
அறிவிப்பு வழங்கிய பின்னர் காசோலை கொடுத்தவர் அறிவிப்பை பெற்றுக்கொண்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும்.
15 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் காசோலை கொடுத்தவர் பணம் தரவில்லை.
காசோலை வழங்கியவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பான 15 நாட்கள் முடிந்ததும், அதன்பின்னர் 30 நாட்களுக்குள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குமார் மீது காசோலை மோசடி வழக்கை காசோலை பெற்றவர் தாக்கல் செய்யலாம்.
இந்த கால அளவில் ஏதாவது தவறு ஏற்பட்டால், காசோலை மோசடி வழக்கு தொடரமுடியாது.
என்ன ‪#‎செய்யக்‬ ‪#‎கூடாது‬ :

காசோலையை 16.05.2015 அன்று வங்கியில் பணம் வசூலிக்க காசோலை பெற்றவர் தாக்கல் செய்கின்றார். காசோலை கொடுத்தவர் கணக்கில் பணம் இல்லை என்று வங்கியாளர் காசோலையை பெற்றவரிடம் தெரியப்படுத்துகின்றார்.
காசோலை கொடுத்தவரை, காசோலை பெற்றவர் தொடர்பு கொண்டால், சற்று பொறுத்து கொள்ளுங்கள் இன்னும் ஒரு மாதத்தில் பணத்தை கொடுத்து விடுவேன் என்கின்றார்.
அவர் பேச்சை கேட்டு காசோலை பெற்றவர் சட்டப்படியான நோட்டிஸ் 30 நாட்களுக்குள் அனுப்பாமல் இருக்கிறார்.
ஒரு மாதம் கழிகின்றது.
பணம் தரவில்லை.
பணத்தை சங்கரன் கேட்டால், காசோலை கொடுத்தவர் பணம் கொடுக்க மறுக்கின்றார்.
30 நாட்களுக்குள் சட்டப்படியான அறிவிப்பு அனுப்பவில்லை என்பதால்.
இப்போது திரும்பி வந்த காசோலையை வைத்து வழக்கிடமுடியாது.
என்ன #செய்ய #வேண்டும் : 2

காசோலையை தாக்கல் செய்வதற்கான கால அளவு குறிப்பிட்ட தேதியில் இருந்து மூன்று மாதம் வரை இருப்பதால், திரும்பவும் ஒரு முறை அந்த காசோலையை பெற்றவர் வங்கியில் தாக்கல் செய்யவேண்டும்.
அது திரும்பி வந்த பிறகு, உடனடியாக காசோலையை கொடுத்தவருக்கு சட்ட அறிவிப்பு அனுப்ப வேண்டும்.
அனுப்புகின்ற அந்த சட்ட அறிவிப்பில் முதலாவதாக பணம் வசூலிக்க காசோலை வங்கியில் போட்ட விபரத்தையும், காசோலை திரும்பி வந்த விபரத்தையும், காசோலையை கொடுத்தவர் பணத்தை ஒரு மாதத்துக்குள் தருவதாகக் கூறியதால் சட்டப்படியான அறிவிப்பு வழங்காமல் இருந்ததையும் தெளிவாக அதில் குறிப்பிடவேண்டும்.
பணத்தை வசூலிக்க குறிப்பிட்ட தேதியில் இருந்து மூன்று மாதம் எத்தனை முறை வேண்டுமானாலும் வங்கியில் அந்தக் காசோலையை தாக்கல் செய்யலாம்.
காசோலை திரும்பி வந்ததும் சட்ட அறிவிப்பு வழங்கலாம்.
ஆனால், கடைசி 15 நாட்கள் இருக்கும் போது தாக்கல் செய்து, காசோலை திரும்பி வந்தால், காசோலையை வழங்கியவர் சொல்லும் கதைகளை (பணத்தை இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்) கேட்காமல் சட்ட அறிவிப்பு வழங்குவது நல்லது.
அல்லது காசோலை வழங்கியவர் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், புதிதாக ஒரு காசோலையை அவரிடம் பெற்ற பிறகே, அவர் நமக்கு பணத்தை கொடுக்க வாய்ப்பளிக்கலாம்.
காசோலை ‪#‎அளித்தவர்‬ ‪#‎இறந்துவிட்டால்‬?

வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் உள்ள உறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டதாகும்.
வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அதன் பின்னர் வங்கியானது வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை கழிக்க முடியாது.
வாடிக்கையாளர் இறந்துவிட்டார் என்று வங்கி காசோலையை திருப்பி அனுப்பினாலும் அதன் அடிப்படையில் காசோலை மோசடி வழக்கிடமுடியாது ஏனெனில் சட்டப்படியான அறிவிப்பை காசோலை வழங்கியவருக்கு மட்டுமே அனுப்பவேண்டும்.
மேலும் இறந்தவர் மீது குற்றவியல் வழக்கு தொடரமுடியாது.
ஆனால், காசோலை கொடுத்தவரின் வாரிசுதாரர்கள் மீது சிவில் வழக்கு போடலாம். இறந்தவர் ஏதாவது சொத்தை விட்டு சென்றால் அந்த சொத்தின் மீது நீதிமன்றத்தின் வாயிலாக உரிமை கோரலாம்.
இறந்தவருக்கு எந்தவித சொத்தும் இல்லையென்றால் இறந்தவர் கடனை அடைக்க அவரின் வாரிசுதாரர்கள் கடமைபட்டவர்கள் அல்ல.
வாரிசுதாரர்களின் கடமையானது இறந்தவரின் சொத்தில் அடையும் உரிமை அளவே ஆகும்…..
விவிலியராஜா🤝👍
வழக்கறிஞர்
9442243433
👮🏻‍♂️காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்👮🏻‍♀️
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் வைத்து காவல்துறை வாகனங்களை நேற்று (08.02.2025) ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.காப அவர்கள் காவல்துறை வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை கேட்டறிந்து சீர் செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும் என்றும், வாகனங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும், எவ்வித விபத்தும் ஏற்படா வண்ணம் வாகனம் ஓட்ட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுனைமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
Tuticorin district reporter muthuselvi
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
༺꧁᪣ நம் தமிழக காவல் துறை Press& Media only police department News᪣꧂༻
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *