🔴LIVE : திமுக திருச்சி மாநாடு

👇

🇮🇳தகவல் மலர்கள்🇮🇳
𝟬𝟵, 𝐌𝐨𝐧𝐝𝐚𝐲 𝐌𝐚𝐫. 𝟮𝟬𝟮𝟲
★❀━━━━🄲🅁🄺━━━━❀★

திருப்பூர் மார்ச் 09,
திங்கள்கிழமை
வரி செலுத்தாமல் டிமிக்கி… தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மணி கட்டுவது யார்?
வரி செலுத்தாத நிறுவனங்கள் முன்பாக அறிவிப்பு பலகை வைக்கனும்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதிப்புக்குரிய மருத்துவர். நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் ஐ ஏ எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நல்லூர் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முக சுந்தரம், பத்து ரூபாய் இயக்க செயலாளர் செல்லம் ,ஈ.பி.அ.சரவணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள மனு விவரம்…
சிறிய கடைகள் மற்றும் வீடுகளுக்கு நெருக்கடி அளிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பெரிய நிறுவனங்களை கண்டுகொள்வது இல்லை என்பது பொதுமக்களின் புகாராக உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு, சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றும் நிறுவனங்கள் எல்லா ஊர்களிலும் இருக்கின்றன. ஆனால், திருப்பூர் மாநகராட்சி மொத்த பட்ஜெட்டைவிட அதிகமாகச் சொத்து வரி பாக்கி வைத்திருக்கிறது தனியார் கல்வி நிறுவனங்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
மாநகராட்சியில் சொத்து வரி, பாதாளச் சாக்கடை வரி உள்ளிட்ட வரி இனங்களில் கோடிக்கணக்கான ரூபாய்கள் நிலுவை இருப்பதும், அதை வசூலிப்பதில் மாநகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாளச் சாக்கடை வரி உள்ளிட்ட வரிகளில் பிரபல ஜவுளி நிறுவனங்கள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கோடிக் கணக்கான ரூபாய்கள் வரி பாக்கி வைத்திருப்பதும் அவற்றை வசூலிப்பதில் மாநகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டி வருவதும் தகவல் தெரிய வருகின்றது
பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் அரசியல் பின்புலத்தில் செயல்படுகின்றன. இதனாலேயே நீதிமன்றம் உத்தரவிட்டும் வரியை செலுத்தாமல் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
எனவே தனியார் கல்வி நிறுவனங்களிடமிருந்து வரியை வசூலித்தால் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும். இதன்மூலம் மக்களுக்கு பல அடிப்படை வசதிகளை செய்ய முடியும். ஆனால் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரி வசூலிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். வரி வசூலிப்பதில் எல்லாருக்கும் ஒரே நிலை பின்பற்றப்பட வேண்டும். ஏழை, எளிய மக்களிடமிருந்து அரசு நிர்ணயித்த வரியை வசூலிப்பதை போல தனியார் கல்வி நிறுவனங்களிடமிருந்தும் வரியை வசூலிக்க அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டுமென திருப்பூர் நகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.
கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக சான்றிதழ் தர மறுக்க முடியாது..!
சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு…
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தாமல் இருந்தால், பல இடங்களில் அந்தக் கல்லூரிகள் மாணவர்களின் மார்க் ஷீட், டிரான்ஸ்ஃபர் சர்டிபிகேட் (TC), பட்டச் சான்றிதழ் போன்ற முக்கியமான கல்வி சான்றிதழ்களை வழங்க மறுக்கும் நடைமுறை உள்ளது. இந்த நடைமுறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி
ஒரு மாணவர் தனது படிப்பை முடித்த பின்னரும், கல்லூரி நிர்வாகம் அவர் செலுத்த வேண்டிய கல்விக்கட்டணம் நிலுவையில் உள்ளது என்ற காரணத்தால் அவரது கல்விச் சான்றிதழ்களை வழங்க மறுத்தது.
இதனால் அந்த மாணவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தனது கல்வி சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
நீதிமன்றத்தின் கருத்து
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூறியதாவது:
கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணம் வசூலிக்க உரிமை உள்ளது. ஆனால் அதற்காக மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை பிடித்து வைத்து வழங்க மறுப்பது சட்டபூர்வமானது அல்ல. மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அவர்களின் அடிப்படை கல்வி உரிமைக்கு சம்பந்தப்பட்டவை.
கல்லூரி நிர்வாகம் கட்டணம் வசூலிக்க வேண்டுமானால் சட்டப்படி வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.
நீதிமன்றத்தின் உத்தரவு
இதையடுத்து உயர்நீதிமன்றம்:
மாணவரின் கல்விச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும்.
கட்டணம் நிலுவையில் இருந்தால், கல்லூரி நிர்வாகம் சட்டப்படி வசூல் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தது.
தீர்ப்பின் முக்கியத்துவம்
இந்த தீர்ப்பு மூலம்:
மாணவர்களின் கல்வி சான்றிதழ்களை கல்லூரிகள் பிணையாக வைத்துக் கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது.
கட்டணம் வசூலிக்க வேண்டுமெனில், கல்லூரிகள் சட்டபூர்வமான நடைமுறைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தால் மாணவர்களின் மார்க் ஷீட் அல்லது TC போன்ற கல்விச் சான்றிதழ்களை கல்லூரிகள் வழங்க மறுப்பது சட்டப்படி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
விவிலியராஜா👍👍
வழக்கறிஞர்
9442243433
அகில இந்திய பத்திரிகை ஊடக சங்க உறவுகளுக்கு வணக்கம்.
சங்கத்தின் தலைமை வழிகாட்டுதலின் அடிப்படையில் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.வியாசை முரளி அவர்கள் நாளை திருச்சி மாவட்டத்தில் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.
திருச்சியில் திமுக மாநாடு நடப்பதால் ஆலோசனைக் கூட்டம் முறையாக செயல்படுத்துவதற்கு வசதியாக இருக்காது என்ற அடிப்படையில் திருச்சி நிர்வாகிகள்,
ஒருங்கிணைப்பாளர் திரு.முரளி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த ஆண்டிற்கான சங்க பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு உங்களது விண்ணப்பங்களை அவரிடத்தில் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்ந்து நாளை மறுநாள் சிவகங்கை செல்கிறார்.
சிவகங்கை பொறுப்பாளர் திரு.தவபொருள்
திரு. பழனிகுமார் அவர்கள் சிவகங்கை
பிரதிநிதிகளை ஒன்றிணைத்து சிறிய ஆலோசனை கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதற்கான வழிமுறைகளை ஒருங்கிணைப்பாளரிடம் தொடர்பு கொண்டு பேசிக் கொள்ளவும்.
சங்கத்திற்காக சிறந்த பணியாற்றிக் கொண்டிருக்கும் திருச்சி பொறுப்பாளர்களுக்கும் ,சிவகங்கை பொறுப்பாளர்களுக்கும் இந்த வேளையில் எனது வாழ்த்துக்களுடன் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
ஆ. வேல்முருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *