தமிழகத்தில் 24 மணி நேரமும் தங்குதடையின்றி இயங்கும் சட்ட விரோத தனியார் மதுபானக்கடைகள் மற்றும் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப்பொருட்கள் விற்பனை – மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லாத திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சட்டவிரோதமாக தனியார் மதுக்கடை ஒன்றில் காலை 8 மணி முதலே தங்கு தடையின்றி மதுபான விற்பனை நடைபெறுவது போல ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னை மாதவரத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் எனும் கொடியவகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதே மாதவரத்தில் பிடிபட்ட போதைப்பொருள் விற்பனை கும்பலிடமிருந்து இருந்து 4 கிலோ போதைப் பொருளோடு 5 நாட்டு துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இப்படியாக, தமிழகத்தில் பொது மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் நடைபெறும் சட்டவிரோத மதுபான விற்பனையால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும், பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கொடியவகை போதை பொருட்களின் தாராளப்புழக்கத்தால் ஏராளமான இளைஞர்களும் தங்களின் எதிர்காலத்தையும் தொலைத்து வருவது வேதனையளிக்கிறது.
தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு அடிப்படை காரணமான சட்டவிரோத மது விற்பனை, போதைப்பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல்,
போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொள்வதாக விளம்பரத்தில் மட்டும் கோருவது எந்த வகையில் நியாயம் ? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுவிற்பனையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவதோடு, போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விரிவான விசாரணை நடத்தி பின்னணியில் இருப்பவர்களையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு.
பத்திரம் பற்றிய தகவல்.பத்திரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம் ( RECTIFICATION DEED) என்பர்.
கிரயம், செட்டில்மெண்ட் (Settlement), பாகப்பிரிவினை (partition), உயில் சாசனம் (will) , பவர் பத்திரம் (Power), அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.
சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழைத்திருத்தல் இருக்கிறது.
திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள்.
பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றால் சொத்தை வாங்கப் பலர் தயங்குவர். அதனால் இந்தச் சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் போடப்படுகிறது.
செக்குப் பந்தியில் இன்னார் வீட்டுக்கு வடக்கே என எழுதுவதை இன்னார் வீட்டுக்கு கிழக்கே என எழுதுவது. பட்டா எண்ணைப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிடுவது, முன்புள்ள பத்திரங்களில் எண்களைத் தற்போது எழுதும்போதும் தவறாக எழுதுவது, இன்சியல், தந்தை பெயர் தவறாக எழுதிவிடுவது. கதவு எண்கள், ஊர்ப் பெயர், தன் பெயர் ஆகியவற்றைத் தவறாக எழுதுவது.
கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள் தவறுதல்கள் எல்லாம், சாதாரண பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தி விடலாம்.
சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரத்திற்கு முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 100/- மொத்த செலவும், 500 க்குள் முடியும்.
உரிமை மாற்றம் பிழைத்திருத்தலில் 2ஏக்கர் 1 சென்ட் என்பதை 1 ஏக்கர் 2 சென்ட் என்று எழுதி விடுவது ஆனால் 2 ஏக்கர் 1 சென்ட்டுக்கு பணம் கொடுத்து இருப்பார்கள், ஆனால் இந்தப் பிழையால் பட்டா (patta) மாறுவது தடையாகி விடும். இதனைத் திருத்துவதற்கு உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட வேண்டும்.
மேற்படி பிழைத்திருத்தல் பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு அதற்கு உண்டான அன்றைய சந்தை வால்யூவை வைத்து அதற்குண்டான கட்டணம் செலுத்தினால்தான் இந்த உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட முடியும்.
குறைவான சதுரஅடி நிலத்தை அதிக சதுரஅடியாக எழுதினால் அதனை தற்பொழுது திருத்தம் செய்யும்போது ஏற்கனவே சார்பதிவகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையை திரும்பிப் பெற்று கொள்ள முடியாது.
சொத்து விற்ற நபர் பிழைத்திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்துப் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.
விற்ற நபருக்கு, வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாம் வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம், பிழைத்திருத்தல் போடலாம். அதற்கும் வழி இல்லை என்றால் நீதிமன்றம் தான் நாட வேண்டும்.
சொத்தை விற்ற நபர் உயிருடன் இருக்கிறார், பிழைத்திருத்தல் போட வர மறுக்கிறார் என்றாலும், நீதிமன்றம் நாடி அதனைத் தீர்க்க வேண்டும்.
சர்வே எண், விஸ்தீரணம் , நீள அகல அளவுகள், என அனைத்துமே பிழையாக இருந்தால் , பிழை திருத்தம் பத்திரத்திற்குப் பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும்.
சில ஆவணங்களில் ஏற்படும் சிறு சிறு தவறுகளை உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிசியல் தவறுகளை பத்திரபதிவு செய்துவிட்ட பிறகு கண்டுப் பிடித்தால் அதனை அமிலம் வைத்தோ ஒயிட்னர் போட்டோ நீங்ளே திருத்தி விடுவது முற்றிலும் தவறு.
மனை எண் 10 யை மனை எண் 11 என்று தவறாக டைப் ஆகி இருந்தால், தாங்கள் பத்திர பதிவுக்கு பிறகு பத்திரத்தில் 10 என்று பேனாவில் போட்டாலும் பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில்11 என்றே இருக்கும்
இது போன்ற திருத்தம் சட்ட விரோத திருத்தமே இதனால் எந்தவித உரிமை மாற்றமும் வாரது. எவே நிச்சயம் பிழை திருத்தல் பத்திரம் போட வேண்டும்.
ஆவணங்களில் எழுதப்பட்ட ஷரத்துக்களில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருப்பின் அடித்தல் திருத்தல் வரி பிளவுக்கு நேராகவோ , குறுக்காகவோ இரண்டு நபர்களும் சான்று கையொப்பம் இட வேண்டும்.
சொத்து விபரம், சர்வே எண்ணில், வரிபிளப்பு ஏற்படுத்தி திருத்தி இருந்து அட்டேஸ்டேசன் வாங்காமல் இருந்தால் அந்த பதிவு நீதி மன்றம் செல்லாது என்றே தீர்ப்பளித்து இருக்கிறது.
விவிலியராஜா
வழக்கறிஞர்
9442243433
5 லட்ச ரூபாய்இலவசமருத்துவ காப்பீடு, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, நம் மோதி அரசு வழங்குகிறது. தேசபக்தர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை எடுத்துச் செல்வோம்.
மூத்த குடிமக்களை இந்த திட்டத்தில் இணைப்பதற்காக , மோடி ஆர்மி சார்பாக, வாராவாரம் முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமுக்கான அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. Please share.
ஒரு முகாம்; இரண்டு பணிகள்
Date January 5, 2025 (Sunday)
Time 10.00 AM to 12.30 PM
Venue SS Manian Flats (car park)
5/13 Thambiah Road Extension
(Opp. Krupa Sankari Street)
(Near Five Lights)
West Mambalam, Chennai 600033
நீங்கள் எங்கு வசிப்பவராக இருந்தாலும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
Please share this invitation widely through Facebook and whatsApp.
You may call us and register your name for the camp.
பணி 1. Voter ID Corrections
▶️New Voter ID
▶️Address change in Voter ID
▶️Corrections in Voter ID
வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்ய
▶️ஆதார் அட்டை
▶️பிறப்புச்சான்றிதழ் (For new voters)
▶️பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (For new Voter ID)
▶️கடந்த மாதம் கேஸ் பில் (For address proof)
▶️தங்களுடைய பழைய வாக்காளர் அடையாள அட்டை,
▶️கைபேசி (Mobile phone)
எடுத்து வரவும்
பணி 2 : மோடி இன்சூரன்ஸ்
Please bring:
Aadhaar card
Mobile (attached to Aadhaar)
Voter id card
▶️இலவச மருத்துவ காப்பீடு பெறுவதற்கு 70 வயது முடிந்திருக்க வேண்டும்.
▶️ During the process of enrollment, we have to take picture of the beneficiary and upload it. The physical presence of the beneficiary is, therefore mandatory.
▶️உங்களது ஆதார் கார்டு (original) மற்றும் (ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண் உள்ள) கைபேசியையும் எடுத்து வரவும்.
▶️உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் கார்டு(original) எடுத்து வரவும்.
▶️Please bring your voter ID Card.
Very Important :
முன்னாள் மத்திய/ மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு சில மருத்துவ காப்பீடு/ reimbursement வசதிகள் தரப்பட்டுள்ளன. If they want to enroll for PM Vay Vandana, they have to forego this facility. This will be an irrevocable option.
PM Health இன்சூரன்ஸ் பற்றி முழு விவரங்களை அறிய
Website: https://pmjay.gov.in/
Helpline: 1800111565
(Please note that the Scheme was introduced recently and it may take a few months to stabilize and be fully functional)
We, the volunteers, will help you to enroll the senior citizens in the Insurance Scheme. If you have any querries or clarifications on the insurance scheme, please use the website given above.
We will send the soft copy of Insurance card through whatsApp. We will also send the list of hospitals empanelled in Chennai. Please check the hospital if they entertain this scheme before visiting them.
மேலும் விபரங்களுக்கு
Pragalathan 9840852709
Lakshmi Narasimhan 9443709151
Jayalakshmi 9789981815
Padmanabhan Nagarajan 9445332894
Please share widely so that the message reaches maximum patriots
🙏
பத்மநாபன் நாகராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *