RTI (Right to Information Act – தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005) முக்கியத்துவம் என்ன ?
Right to Information Act, 2005 என்பது பொதுமக்கள் அரசாங்க அலுவலகங்களில் உள்ள தகவல்களை சட்டபூர்வமாக கேட்டு பெற உதவும் முக்கியமான சட்டமாகும்.
RTI-யின் முக்கியத்துவங்கள்:
அரசின் வெளிப்படைத்தன்மை
அரசு அலுவலகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மக்கள் அறிய உதவுகிறது.
ஊழலை குறைக்கிறது
மறைக்கப்பட்ட தகவல்கள் வெளிவருவதால் அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நிலை உருவாகிறது.
மக்கள் உரிமையை பாதுகாக்கிறது
நலத்திட்டங்கள், உதவித்தொகைகள், அரசு சேவைகள் போன்றவை சரியாக கிடைக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள உதவுகிறது.
அரசை பொறுப்புக்கூறச் செய்கிறது
அரசு எடுத்த முடிவுகளுக்கான காரணங்களை கேட்க மக்கள் அதிகாரம் பெறுகின்றனர்.
சாதாரண மக்களுக்கும் அதிகாரம்
எந்த சாதாரண குடிமகனும் குறைந்த கட்டணத்தில் தகவல் கேட்கலாம்.
சமூக நலத்திற்கு உதவுகிறது
நில மோசடி, போலி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு முறைகேடு போன்ற பல விஷயங்கள் RTI மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது
“மக்களுக்கான அரசு” என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த உதவுகிறது.
RTI மூலம் கேட்கக்கூடிய சில தகவல்கள்:
அரசு திட்ட நிதி விவரங்கள்
சாலை / குடிநீர் பணிகள் பற்றிய தகவல்
EB, Corporation, VAO, Tahsildar அலுவலக நடவடிக்கைகள்
தேர்வு மதிப்பெண் / Answer sheet நகல்
போலீஸ் CSR / FIR நிலை
முக்கிய காலவரம்பு:
பொதுவாக 30 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும்.
“தகவல் அறிதல் என்பது மக்கள் அதிகாரம்”
அகில இந்திய தகவல் மற்றும் சட்ட முன்னணி போன்ற அமைப்புகள்
RTI விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் போது, சமூக நீதி மற்றும் வெளிப்படைத்தன்மை மேலும் வலுப்படும்.
விவிலியராஜா👍🏻🤝 வழக்கறிஞர்
9442243433
மதபொதுமக்களுக்கு வழங்க வேண்டிய கேஸ் சிலிண்டர்களை காலம் கடத்தாமல் உடனே வழங்கிடு !
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள நூற்றுக்கணக்கானபொதுமக்களுக்கு அரசு வழங்க வேண்டிய கேஸ்சிலிண்டர்களை பதிவு செய்து பல வாரங்கள் கடந்தும் இன்னும் அவர்களுக்கு 3 மூன்று வாரங்களாக தாண்டிக்குடிக்கே இண்டியன் கேஸ் சிலிண்டர் வண்டி போன்ற மற்ற கம்பெனி கேஸ் வண்டிகளும் முறையாக தாண்டிக்குடிக்கு வந்து சிலிண்டர்களை வழங்காமல் பொதுமக்களை ஏமாற்றி வருவதால் எங்கள் ஊரில் உள்ள பலரும் இன்னும் பதிவு செய்த சிலிண்டர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு பசியால் வாடுகிறார்கள்
இது குறித்து நான் ஏற்கனவே கடந்த வாரம் கொடைக்கானல் வட்ட வழங்கல் அதிகாரி அவர்களிடம் போன் மூலம் புகார் செய்தேன் ஆனால் இன்று 23 5 2026 சனிக்கிழமை இரவு 8 மணி வரை சிலிண்டர் வண்டி வாராததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம்
அதனால் பிளாக்கில் 1800 ரூபாய் 2000 இரண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டும் உடனே சிலண்டர் எப்படி கிடைக்கிறது என்பதை அரசுஅதிகாரிகள் உடனே விசாரணை செய்து அனைத்து கேஸ் கம்பெனிகளிடம் பேசிஉடனே தாண்டிக்குடி கிராம பொதுமக்களைப் போராட்டம் செய்ய தூண்டாமல் சிலிண்டர் வேண்டிபதிவு செய்த அனைவருக்கும் அவர்களுக்கு வழங்க வேண்டியசிலிண்டர்களை உடனே வழங்கி பொதுமக்களை பசி பட்டினியிலிருந்து காப்பாற்றிடும்படி நமது மாவட்ட ஆட்சியர் அவர்களையும் மற்றும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் நன்றி
இப்படிக்கு
தாண்டிக்குடி
கணேஷ்பாபு
சமூக ஆர்வலர்
செல் 91590 84 524
இணைப்பு
கேஸ் சிலிண்டருடன் காத்திருந்த எனது வீடியோ காட்சியை பாருங்கள் உடனே சிலிண்டர் வழங்குங்கள்
என வே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *