Union Home Minister Amit Shah held a meeting with BJP leader K. Annamalai in the national capital, on Tuesday.AmitShah | #Annamalai | #BJP | #RepublicWorld தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இன்று இந்தியா முழுவதும் அதிகம் பேசப்படும் அரசியல் தலைவர் அண்ணாமலை.தேசிய தொலைக்காட்சிகள், YouTube சேனல்கள், Facebook, X, Instagram என எந்த சமூக ஊடகத்தைத் திறந்தாலும் தற்போது பேசப்படுவது அவரைப் பற்றித்தான்.ஜூன் 4 அன்று அவர் என்ன கூறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரங்களையும், பொதுமக்களையும் ஆவலுடன் காத்திருக்க வைத்துள்ளது.இவர் ஒரு சினிமா நட்சத்திரம் அல்ல.பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்தவரும் அல்ல.தனது அறிவு, நேர்மை, துணிச்சல் மற்றும் கடின உழைப்பின் மூலம் சாதாரண மக்களின் இதயங்களில் இடம்பிடித்தவர்.ஒரு மனிதரை ஆதரிக்கலாம், எதிர்க்கலாம்.ஆனால் அவரை புறக்கணிக்க முடியாது.இன்று தமிழ்நாட்டு அரசியலில் அண்ணாமலை இல்லாமல் விவாதங்களே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.உண்மை வெல்லட்டும்.நேர்மை நிலைக்கட்டும்.தமிழகத்தின் எதிர்காலம் சிறக்கட்டும்.ஜூன் 4-ஐ நோக்கி அனைவரின் பார்வையும்… 💫நல்லதே நடக்கும் 🪬🦚 பள்ளிகள் திறப்பையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வுஈரோடு மாவட்டம், தூக்கநாய்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பள்ளிகளில் தூய்மைப் பணிகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மின்சார வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.மேலும், பள்ளியில் மாணவர்களின் இருக்கை வசதிகள், கதவுகளின் நிலைப்பாடு ஆகியவற்றை பார்வையிட்ட ஆட்சித்தலைவர், மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ள விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பைகள் மற்றும் சீருடைகளின் இருப்பு விவரங்களை பதிவேடுகளின் வாயிலாக சரிபார்த்தார்.தொடர்ந்து, காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் செயல்படும் விதம் குறித்தும், பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார். பள்ளி வளாகத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அங்குள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.இந்த ஆய்வின் போது தூக்கநாய்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதவன், இந்திராணி மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுதலைமைச் செயலகத்தில் பார்வையாளர்கள் வருகைக்கு கட்டுப்பாடு விதித்தது தமிழ்நாடு அரசு. முன் அனுமதி பெற்ற பார்வையாளர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி என தெரிவித்துள்ளதுமுதலமைச்சரின் முகவரி துறைக்கு மனு அளிக்க வருபவர்கள் தனியாக வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டிகளில் மனுக்களை போடலாம் என தகவல். தவெக அரசு அமைந்த பின் தினமும் அதிகம் பேர் தலைமைச்செயலகம் வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை என விளக்கம். Share The News Post navigation 🙋♀️முக்கிய செய்திகள்💐 Next Post